England Cricket Team Super-8 Equation: டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. மேலும், நேற்றைய போட்டியிலும் தோல்வி அடைந்ததால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையில் பெரிய பாராங்கல் விழுந்தது. 


இருப்பினும், ஒரு சில விஷயங்கள் நடந்தால் இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். அது என்னவென்று இங்கே பார்க்கலாம். 


இங்கிலாந்து அணி என்ன செய்ய வேண்டும்..? 


ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால், இது மட்டும் போதாது. மேலும், எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் ஸ்காட்லாந்து தோற்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி தோற்று, இங்கிலாந்து அணி நமீபியா மற்றும் ஓமன் அணிகளை அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி கண்டால் சூப்பர் 8 சுற்றை எட்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றில் ஸ்காட்லாந்து அணி விளையாடுவதை காண வேண்டியதுதான். தற்போது குரூப் பியில் இங்கிலாந்து அணி 1 புள்ளியுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 






குரூப் பி பிரிவில் மற்ற அணிகளின் நிலைமை என்ன..? 


டி20 உலகக் கோப்பை குரூப் பி பிரிவில் இக்குழுவில் ஸ்காட்லாந்து 2 போட்டிகளில் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் இரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த பிரிவில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி ஓமன் மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக நமீபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஓமன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இருப்பினும், இங்கிலாந்துக்கு முன்னோக்கி செல்லும் பாதை எளிதானது அல்ல என்பது புள்ளிகள் அட்டவணையில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.


மேலும் படிக்க: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?


இங்கிலாந்து அணி - நடப்பு சாம்பியன் அந்தஸ்து..!


கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.