டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல்  ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


இந்நிலையில் இந்தச் சூழலில் இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் யார் யார்?


டேவிட் வார்னர்(6): 
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி வருகிறார். இவர் தற்போது வரை 30 போட்டிகளில் விளையாடி 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இம்முறையும் இவர் அரைசதம் கடக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியலில் இவர் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. 


மகேலா ஜெயவர்தனே(6):


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கினார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  அத்துடன் இவர் ஒரு முறை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் விளாசியும் அசத்தியுள்ளார். 


கிறிஸ் கெயில்(7):
டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 30 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  இவை தவிர டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இவர் சதம் விளாசியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாடி இருந்தார். 


ரோகித சர்மா(8):


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடர் முதல் அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.  இவர் தற்போது வரை  30 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 8 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.


விராட் கோலி(10):
இந்தப் பட்டியலில் இந்தியாவின் வாட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 2012 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கி வருகிறார். இவர் தற்போது வரை 19 இன்னிங்ஸில் களமிறங்கி 10 முறை அரைசதம் கடந்து முதலிடம் பிடித்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரைசதம் கடப்பதில் இவருக்கும் ரோகித் சர்மாவிற்கும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.