ஆஸ்திரேலியாவில் நாளை 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடர் (நாளை) அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 16 அணிகள் ஏழு ஆஸ்திரேலிய நகரங்களில் 45 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 16 அணிகள் அதிகாரப்பூர்வமாக மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட போட்டியில் விளையாடுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 16 முதல் தகுதிச் சுற்றில் 8 அணிகள் விளையாடி லீக் போட்டிகளுக்குள் தகுதி பெறும்.
தகுதிச் சுற்றில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற பலம் வாய்ந்த அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். சூப்பர் 12 ஸ்டேஜில் ஏற்கனவே முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் சுற்றில் விளையாடி தகுதி பெறும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லும்.
முதல் சுற்று
குழு ஏ
நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
குழு பி
அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே
சூப்பர் 12
குழு 1
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, குரூப் ஏ வெற்றியாளர், குரூப் பி இரண்டாம் இடம்
குழு 2
பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, குரூப் பி வெற்றியாளர், குரூப் ஏ இரண்டாம் இடம்
இடங்கள்:
2022 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியா முழுவதும் ஏழு மைதானங்கள் பயன்படுத்தப்படும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டியும், அரையிறுதிப் போட்டிகள் அடிலெய்டு ஓவல் மற்றும் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.
பிரிஸ்பேனில் உள்ள கப்பா, ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க், ஹோபார்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மற்றும் பெர்த் மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
16 அணிகளின் கேப்டன்கள்:
இந்தநிலையில், டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தானின் அணியின் கேப்டன் பாபர் அசாம், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புகைப்படத்தில் இருக்கும் மற்ற அணிகளின் கேப்டன்கள் பின்வருமாறு :
- தென்னாப்பிரிக்கா - பவுமா
- இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்
- இலங்கை - தசுன் சனகா
- ஆப்கானிஸ்தான் - முகமது நபி
- வங்காளதேசம் - ஷகிப் அல் ஹசன்
- அயர்லாந்து - ஆண்ட்ரூ பால்பிர்னி
- நமீபியா - ஹெகார்ட் எராஸ்மஸ்
- நியூசிலாந்து - கனே வில்லியம்சன்
- நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்
- ஸ்காட்லாந்து - ரிச்சர்ட் பெரிங்டன்
- ஐக்கிய அரபு நாடுகள் - சிபி ரிஸ்வான்
- வெஸ்ட் இண்டீஸ் - நிக்கோலஸ் பூரன்
- ஜிம்பாவே - கிரேக் எர்வின்