ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலககோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 


தீபாவளி முதல் நாளான நேற்று, அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த போட்டியை உலகளவில் கிட்டதட்ட 70 கோடி பேர் கண்டு ரசித்தனர். இதுவும் உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது. நேற்றைய போட்டியில் விராட் கோலியின் முக்கியமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. மீண்டும் பல நாளுக்கு பிறகு ஒரே நாளில் விராட் கோலி ஹீரோ ஆனார். 


இதையடுத்து, வெற்றிக்கு பிறகு இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு சிறந்த பரிசை விராட் கோலி கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள், பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். 


இந்தநிலையில் தீபாவளிக்கு முதல் நாளான நேற்று விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். அதேபோல், கடந்த 2005 ம் ஆண்டு தோனி செய்த சம்பவம் தெரியுமா..? வாங்க தெரிந்து கொள்வோம். 






கடந்த 2005, நவம்பர் 1 ம் தேதி நாடுமுழுவதும் வெகு சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது. அதற்கு முதல் நாள் (அதாவது அக்டோபர் 31ம் தேதி) இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.


முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குமார் குமார் சங்கக்கரா 138 ரன்களும், ஜெயவர்த்தனே 71 ரன்களும் எடுத்திருந்தனர். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அன்றைய நாளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து சேவாக் உறுதுணையாக எம்.எஸ். தோனி களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய சேவாக் 39 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ராகுல் டிராவிட் 28 ரன்களுடன் நடையைக்கட்டினார். தொடர்ந்து, யுவராஜ் சிங்கும் தன் பங்கிற்கு 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். 


மறுபுறம் ஒற்றை ஆளாக தோனி 145 பந்துகளில் (15 பவுண்டரிகள், 10 பந்துகள்) 183 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இந்திய அணி 46.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 






இந்த போட்டியும் தீபாவளிக்கு முதல் நாள் நடந்ததால், இரண்டையும் ஒன்று சேர்த்து தற்போது இந்திய ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் அடித்ததை நினைவுக்கூர்ந்து #Dhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.