நடப்பு உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி இன்று அரையிறுதியில் தோல்வி அடைந்து, இந்த தொடரில் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன் தொடர்களில் அரையிறுதி, இறுதிப்போட்டிகள் என இறுதிவரை போராடி தோல்வியுடன் வெளியேறி வருகிறது.


2014 டி20 உலககோப்பை :


இறுதிப்போட்டி :


2014ம் ஆண்டு டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை இலங்கையிடம் இந்தியா பறிகொடுத்தது.


2015 ஒருநாள் உலககோப்பை :


அரையிறுதி :


2015ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


2016 டி20 உலககோப்பை :


அரையிறுதி :


2016ம் ஆண்டு டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.


2017 சாம்பியன்ஸ் டிராபி


இறுதிப்போட்டி :


2017ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.


2019 ஒருநாள் உலககோப்பை :


அரையிறுதி :


2019ம் ஆண்டு உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.


2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் :


இறுதிப்போட்டி :


முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை பறிகொடுத்தது.


2022 டி20 உலககோப்பை :


அரையிறுதி :


இன்று அடிலெய்டில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் தொடர்களில் தொடரி்ன் இறுதி வரை சென்று கோப்பையை கைப்பற்றாமல் வெளியேறும் சோகம் நடப்பு உலககோப்பை டி20 தொடரிலும் அரங்கேறியிருப்ப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.