T20 World Cup 2022 Final : டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதை அடுத்து, அதன் வெற்றியை கூகுள் கொண்டாடி வருகிறது.
இங்கிலாந்து அணி வெற்றி
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.
முதலில் களமிறங்கிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டர்கள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். அவர் ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணி வெல்லும் இதுது 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
வெற்றியை கொண்டாடும் கூகுள்
கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதும் ரசிகர்களை எப்போதுமே உற்சாகப்படுத்தும் விஷயம். கடைசி வரையில் முடிவு தெரியாமலே சஸ்பன்ஸாக இந்த விளையாட்டு இருக்கும். என்ன ஆகுமோ யார் வெல்வாரா என்ற பதற்றத்துடன் உற்சாகத்துடன் கடைசி விநாடிவரை ரசிகர்களை காத்திருக்க செய்வதால் தன்னை தனித்த விளையாட்டாக அடையாளப்படுத்திக் கொள்கிறது கிரிக்கெட்.
அத்தகையை ரசவாதமிக்க விளையாட்டு என்பதாலேயே உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர். டி20 உலகக் கோப்பை போட்டி மெல்போர்னில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை நேரிலும் தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வந்தனர். அதன்படி இன்று அதற்கான இறுதிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள 80,462 பேர் மைதானத்தில் கண்டு களித்து வருகின்றனர்.
அதன்படி, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றுடன் முடிவடைவதையொட்டி, அதனை தனது பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் கூகுள் தனது பேஜில் டூடூல் போட்டு கொண்டாடி வருகிறது. வாணவெடி போன்று டூடூல் போட்டுள்ளது கூகுள்.
மேலும் படிக்க