இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்,  சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனை முறியடித்துள்ளார்.  இதில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்களின் பட்டியலில் பும்ராவை பின்னுக்குத் தள்ளி, 10 மெயிடன் ஓவர்களுடன் ஸ்பின் பவுலர் புவனேஷ்வர் குமார் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் டி-20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா அணி  186 ரன்களை இலக்கு நிர்ணயித்தது. இதையெடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி, புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேலும், முதல் ஓவரில் ஜிம்பாப்வே அணி ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மெய்டன் செய்தார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் 10 மெய்டன் ஓவர்கள் வீசி பும்ராவின் சாதனையை முறியடித்தார். 84 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்களுடன் 82 விக்கெட்கள் எடுத்துள்ளார்.  


சர்வதேச புள்ளிப் பட்டியலில் பும்ரா 60 போட்டிகளில் விளையாடி 9 மெயிடன் ஓவர்களுடன் 70 விக்கெட்கள் எடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறார்.


ஜெர்மனி கிரிக்கெட் வீர குலாம் அக்மதி (Ghulam Ahmadi ) 26 போட்டிகளில் விளையாடி 8 மெய்டன் ஓவர்களுடன் 25 விக்கெட்களை எடுத்து புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். உகாண்டா கிரிக்கெட் அணியின் வீரர் ஃபிராங்க் நசுபுகா (Frank Nsubuga) 32 போட்டிகளில் 8 மெயிடன் ஓவர்களுடன் 28 விக்கெட்களுடன் நான்கவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 64 போட்டிகளில் 3 மெயிடன் ஓவர்களுடன் 69 விக்கெட்கள் எடுத்துள்ளார்.பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் -அல்- ஹசன் 109 போட்டிகளில் விளையாடி 3 மெய்டன் ஓவர்களுடன் 128 விக்கெட்களை எடுத்துள்ளார்.