சர்வதேச டி 20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


இந்தியா - தென்னாப்பிரிக்கா:


ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், உள்நாட்டில் நடைபெற்ற டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அதன்படி, இளம் வீரர்களை கொண்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட அந்த தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இந்நிலையில், இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதில், 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.


இதில், மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி இன்று டிபி வேர்ல்ட் வாண்டரர்ஸ் மைதானத்தில் (டிசம்பர் 14) நடைபெற்றது. 


இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். 6 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற சுப்மன் கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹாராஜ் பந்தில் எல்.பி.டபூள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதிக சிக்ஸர்கள்:




பின்னர் வந்த திலக் வர்மா டக் அவுட் ஆனார். அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார்.  இன்றைய போட்டியின் மூலம் அவர் புதிதாக ஒரு சாதனை படைத்தார். அதன்படி, டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (117) அடித்த இரண்டாவது  இந்திய வீரராக இருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.


முன்னதாக, விராட் கோலி 107 இன்னிங்ஸ்கள் விளையாடி 117 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். அதேபோல், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 140 இன்னிங்ஸ்கள் விளையாடி 182 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறர். இச்சூழலில், தான் தற்போது 57 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 


 


மேலும் படிக்க: KKR Captain: ஐ.பி.எல்.2024... புதிய கேப்டனை அறிவித்தது கொல்கத்தா அணி! விவரம் உள்ளே!


 


மேலும் படிக்க: Mohammed Shami: உலகக்கோப்பை தோல்வி; நாங்கள் மனதளவில் தயாராக பிரதமர் மோடிதான் காரணம் - முகமது ஷமி