Suryakumar Yadav: 2022ஆம் ஆண்டுக்கு சிறந்த டி-20 வீரர் சூர்யகுமார் யாதவ் என ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 31 போட்டிகளில் விளையாடி 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் எடுத்துள்ளார்.  கடந்த ஆண்டில் யாதவ் 68 சிக்ஸர்களை விளாசினார். இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களை அடித்து, கடந்த ஆண்டு முழுவதும் தான் களாமிறங்கிய போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 


2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆண்காள் டி20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ், ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்கள் அடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் அவரது ஸ்ட்ரைக்-ரேட் மீண்டும் 189.68 ஆக உயர்ந்தது. 


புள்ளிகளிலிருந்து 908 புள்ளிகள் பெற்று, டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் வலம் வருகிறார். 


சூர்யகுமார் யாதவ் 908 புள்ளிகள் பெற்றதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் பெற்ற அதிகபட்ச ரேட்டிங்காக பதிவானது. இதற்கு முன்னதாக விராட் கோலி டி20யில் அதிகபட்சமாக 897 ரேட்டிங் புள்ளிகளும், கேஎல் ராகுல் 854 ரேட்டிங் புள்ளிகளும் பெற்று இருந்தனர். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 900 ரேட்டிங்கை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். 


சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 915 ரேட்டிங் புள்ளிகள் வரை பெறப்பட்டுள்ளது. அதை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் மட்டும் பெற்று இருந்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் 900 ரேட்டிங் புள்ளிகளை பெற்று இருந்தார். 




தற்போது, ஆரோன் பின்சையும் சூர்யகுமார் யாதவ் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். இன்னும், டேவிர் மலனை முந்த சூர்யகுமாருக்கு 7 புள்ளிகளே மீதம் உள்ளது. அதையும் முந்தினால் இதுவரை டி20 போட்டிகளில் யாரும் எடுக்காத ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். சூர்யாவின் டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இது மூன்றாவது சதம். இந்த சதத்திற்கு பிறகு தான் சூர்யா தரவரிசையில் இந்த ரேட்டிங் புள்ளிகளை பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். ரோஹித் சர்மா மட்டும் 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.