இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி ஜெய்பூரில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது.


இதில், ஓப்பனிங் களமிறங்கிய ராகுல், ரோஹித் இணை அதிரடியாக தொடங்கியது. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் எட்டியிருந்த நிலையில், சாண்ட்னர் பந்துவீச்சில் ராகுல் அவுட்டாகினார். அவரை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், அதிரடியாக பேட்டிங் செய்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இன்னொரு புறம் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட, 3 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசிய அவர், 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து இந்திய அணி இலக்கை நெருங்க முக்கிய பங்காற்றினார். 


சூர்யகுமார் யாதவ் அதிரடி:













மேலும் படிக்க: ICC Announcement: இந்தியாவில் 2 உலகக்கோப்பை தொடர்கள்: 2024 - 2031 ஐசிசி தொடர் அட்டவணை முழு விவரம் வெளியீடு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண