உலககோப்பை போட்டித்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவு பெற்றது. அந்த தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் போராடி தோற்றது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட்கோலிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக மூத்த வீரர் டிம் சவுதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக முதல் போட்டியில் செயல்படவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதே சமயத்தில், 30 வயதான லோகி பெர்குசன் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டித்தொடரில் பங்கேற்கிறார்.
இந்தநிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஐபிஎல் 2021 தொடரில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர் இன்று நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி பின்வருமாறு :
ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்),வெங்கடேஷ் ஐயர், ரவிசந்திரன் அஸ்வின், தீபக் சகார், புவனேஷ்வர் குமார், முஹம்மது சிராஜ்.