Suryakumar Yadav: இந்தியா கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி வரை தோல்வி இல்லாமல் முன்னேறி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அலுவலகர்கள் என அனைவரும் பெரும் கவலையினை சந்திக்க நேர்ந்தது.  


இதையடுத்து இன்று முதல் அதாவது நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்த அணி நாளை விசாகப்பட்டினத்தில் இருந்து தனது 5 டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. 


இதற்கு முன்னாதாக இன்று செய்தியார்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் உலகக் கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “வெளிப்படையாக கூறவேண்டும் என்றால் இது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுதான். ஆனால் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, ​​அது ஒரு பெரிய பயணமாக இருந்தது. வீரர்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு உறுப்பினரும், இந்தியா முழுவதும் நாங்கள் எங்கள் திறமையை மைதானத்தில் வெளிப்படுத்திய விதம் மிகவும் பெருமையாக இருந்தது. உலகக் கோப்பை முழுவதும் நாங்கள் விளையாடியது நேர்மறையான கிரிக்கெட். அதற்காக நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்,” என்றார் சூர்யகுமார்.


இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்திற்குத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பற்றி கேட்டபோது, ”அது எளிதானது அல்ல, ஆனால் யாரேனும் ஒருவர் முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.



இந்தியா vs ஆஸ்திரேலியா T20I தொடர்: அட்டவணை




அனைத்து ஐந்து T20I போட்டிகளும் அந்தந்த நாட்களில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. 




1வது T20I: விசாகப்பட்டினம் - நவம்பர் 23, வியாழன்




2வது டி20: திருவனந்தபுரம் - நவம்பர் 26, ஞாயிறு




3வது டி20: கவுகாத்தி - நவம்பர் 28, செவ்வாய்




4வது T20I: ராய்ப்பூர் - டிசம்பர் 01, வெள்ளிக்கிழமை 




5வது டி20: பெங்களூரு - டிசம்பர் 03, ஞாயிறு 



இந்தியா vs ஆஸ்திரேலியா T20I தொடர்: அணிகள்




இந்தியா (இந்தியா): சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (கடந்த இரண்டு போட்டிகள் மட்டும்)




ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா): மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆடம் ஜம்பா