இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா இனி டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என, 50 ஓவர் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு தனது எதிர்காலம் குறித்து நெருங்கிய வட்டாரத்தில் விவாதித்ததாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2022 இல் இந்தியா டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெளியேறியதிலிருந்து ரோஹித் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றார். 36 வயதான இந்திய கேப்டன் 148 டி20 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் கவனம் செலுத்தியதால் கடந்த ஒரு வருடமாக டி20 போட்டிகளில் ரோஹித் விளையாடவில்லை. இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருடன் அவர் விரிவாக விவாதித்துள்ளார். இந்த முடிவு முழுக்க முழுக்க ரோஹித்தின் முடிவு என PTI இடம் பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
ரோஹித்துக்குப் பிறகு, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு தொடக்க ஆட்டக்காரர்களை இந்தியா கொண்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய லீக் போட்டிகளில் தனது திறமைகளை நிரூபித்துள்ளனர். இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ ரோஹித்தின் தற்போதைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரோஹித் தனது பணிச்சுமையை சரியாக நிர்வகித்து, தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் காயம் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று வடிவங்கள் மற்றும் ஐபிஎல் விளையாடுவது சாத்தியமற்றது மற்றும் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை ஏழு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட வேண்டிய அட்டவணையில் இருப்பதால், இந்திய கேப்டன் ரோஹித்தின் கவனம் பெரும்பாலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் இருக்கும் எனலாம்.
2025 இல் இந்தியாவை மற்றொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியுமாக வாய்ப்பு அவருக்கு இன்னும் உள்ளது. மேலும் அவர் 2019 இல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அவரின் கிரிக்கெட் முற்றிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது பும்ரா, ஷமிக்கு
தென்னாப்பிரிக்காவில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தாக்குதலை முன்னெடுப்பார் என நம்பலாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரின் போது வேகப்பந்து வீச்சாளர் மூவரும் மாறி மாறி களமிறக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.