CSA League; இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக, 15 சீசன்களாக நடந்து வரும்  இந்திய ப்ரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியைப் போல் தென் ஆப்பிரிக்காவிலும் நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள புதிய உள்நாட்டு டி20 லீக் தொடரில் ஆறு அணிகளை வாங்கியுள்ளது. 






இந்த லீக் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சூப்பர்ஸ்போர்ட் உடன் இணைந்து நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உரிமையாளரான இந்தியன் சிமெண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் உரிமையை கைப்பற்றியுள்ளது, மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் உரிமையை கைப்பற்றியுள்ளது. அதேபோல், சன்ரைசர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமம், க்கெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) உரிமையை கைப்பற்றியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் லக்னோ அணியின் ஐபிஎல் உரிமையை  7090 கோடி ரூபாய் செலுத்தி வாங்கிய ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழு டர்பன் அணியையும், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்ல் அணியை வாங்கியது.  மேலும், டெல்லி கேப்பிடல்ஸின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. 


இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் பெயரை வெளியிட்டு வந்த நிலையில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி, தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான பெயரை வெளியிட்டுள்ளது.  ”சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப்” என்பது அணியின் பெயர் என சன்ரைசஸ் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இதற்கு முன்னதாக, மும்பை அணி MI கேப் டவுன் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜான்னெஸ் சூப்பர்பெர்ஹ் என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பார்ல் ராயல்ஸ் எனவும், டெல்லி கேபிடல் அணி பெரிடோரியா கேபிடல் எனவும் பெயரை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த டி20 லீக்கின் ஒட்டுமொத்த தலைவராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து கிரேம் ஸ்மித் தெரிவிக்கையில், “ இது உண்மையிலேயே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு ஒரு உற்சாகமான நேரம். உலகளாவிய கிரிக்கெட் சுற்றுச்சூழலில் நாடு மதிப்புமிக்கதாக இருப்பதை அபரிமிதமான ஆர்வம் காட்டுகிறது. அந்தந்த உரிமையாளர்களின் வலுவான விளையாட்டுப் பின்னணியையும் அவர்கள் நிர்வகிக்கும் உலகளாவிய பிராண்டுகள் மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிச்சயம் பயனடையும் எனவும், நாங்கள் ஏற்கனவே பல முன்னணி சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளோம், அவர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்." என தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண