சுனில் நரேன்:
கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த சுனில் நரேன் இதுவரை மொத்தம் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமானார்.
அதன்படி, மொத்தம் 65 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள நரேன், 92 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 363 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மொத்தம் 36 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல் தனது கடைசி ஒரு நாள் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர் 5 ஆம் தேதி 2016-ஆம் ஆண்டு விளையாடினார்.
டெஸ்ட் அறிமுகம்:
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகள்:
சுனில் நரேன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மொத்தம் 51 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில், 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் கொல்க்கத்தா அணிக்காக விளையாடினார். 161 போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இச்சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் இன்று (நவம்பர் 5) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ’ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள்,அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் நன்றி.’ என்று கூறியுள்ளார். மேலும், ’நான் சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த சூழலில் எனது ஓய்வை அறிவிக்கிறேன். நான் பிறந்த நாடான டிரினிடாட் & டொபாகோவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சுனில் நரேனின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவு செய்ய வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Happy Birthday Virat Kohli: ரன் மிஷின் விராட் கோலி...பிறந்த நாட்களில் எப்படி விளையாடி உள்ளார்? விவரம் இதோ!
மேலும் படிக்க: IND vs SA: டேபிள் டாப்பர்களில் யார் இன்று டாப்? ஈடன் கார்டனில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா! புள்ளி விவரம் என்ன?