ராகுல் ட்ராவிட்டிற்கு பாரத ரத்னா வழங்கினால் நாடு அவருக்கு கொடுக்க கூடிய மிக உயர்ந்த பாராட்டிற்கு தகுதியானதாக இருக்கும். வாருங்கள், அனைவரும் அரசாங்கத்திடம் கேட்பதில் என்னுடன் சேருங்கள். இந்தியாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரான ராகுல் ஷரத் டிராவிட்டை அங்கீகரிக்க வேண்டும் அல்லவா என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:


கடந்த ஜூன் 29 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இதை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இச்சூழலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிட்டிற்கு பாரதரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், “இந்திய அரசு ராகுல் ட்ராவிட்டிற்கு  பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும், அவர் உண்மையிலேயே அப்படித்தான் இருந்தார். சிறந்த வீரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸில் வெளிநாட்டுத் தொடரில் வெற்றி பெற்றபோது அந்த வெற்றி அர்த்தமான ஒன்றாக அமைந்தது.  


இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டித் தொடரை வென்ற மூன்று இந்திய கேப்டன்களில் ஒருவரான அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், பின்னர் மூத்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ஒரு அற்புதமான திறமைசாலி ட்ராவிட்.


ட்ராவிட்டிற்கு பாரத ரத்னா:


முன்னதாக, சமுதாயத்திற்கு மகத்தான சேவை செய்த சில தலைவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அவர்கள் கொண்டிருந்த செல்வாக்கு பெரும்பாலும் தங்கள் கட்சிக்கும் அவர்கள் வந்த நாட்டிற்கும் மட்டுமே என்பதை அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ஒப்புக்கொள்வார்கள். அந்த வகையில் ராகுல் ட்ராவிட்டின் சாதனைகள் அனைத்துக் கட்சி பேதங்கள் மற்றும் சாதி, மதம், சமூகங்கள் கடந்து மகிழ்ச்சியை அளித்து, முழு நாட்டிற்கும் சொல்ல முடியாதா மகிழ்ச்சியை அளித்தது.


நிச்சயமாக ராகுல் ட்ராவிட்டிற்கு பாரத ரத்னா வழங்கினால் நாடு அவருக்கு கொடுக்க கூடிய மிக உயர்ந்த பாராட்டிற்கு தகுதியானதாக இருக்கும். வாருங்கள், அனைவரும் அரசாங்கத்திடம் கேட்பதில் என்னுடன் சேருங்கள். இந்தியாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரான ராகுல் ஷரத் டிராவிட்டை அங்கீகரிக்க வேண்டும் அல்லவா?” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!


 


மேலும் படிக்க: IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!