அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் பேட்ஸ்மேனான சுனில் கவாஸ்கர் இந்திய  அணிக்கு ஒரு காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்த போட்டி முழுவதும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒரு இடத்தில் கூட அதிக்கம் செலுத்தவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.


மூன்றே நாளில் முடிந்த போட்டி: 


இந்திய அணி நிர்ணயித்த 19 ரன்கள் என்கிற இலக்கை அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி துரத்தியதால், மூன்றாவது நாளின் முதல் ஷேனில் இந்த போட்டி  முடிவுக்கு வந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் அமர்ந்து கொண்டு பயிற்சிக்கு வரமால் இருக்க கூடாது என்று கவாஸ்கர் வலியுறுத்தினார்.


கவாஸ்கர் பேச்சு: 


இது குறித்து கவாஸ்கர் பேசிய போது “மீதமுள்ள தொடரை மூன்று போட்டிகள் கொண்ட தொடராகப் பாருங்கள். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்பதை மறந்துவிடுங்கள். இந்த இந்திய அணி அடுத்த இரண்டு நாட்களை பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் கிரிக்கெட் விளையாட இங்கு வந்திருப்பதால், உங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது எங்கு சென்றாலும் நீங்கள் உட்கார முடியாது,” என்றார் கவாஸ்கர்.


விருப்ப பயிற்சி எனக்கு விருப்பமில்லை:







"நீங்கள் நாள் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எந்த நேரத்தை தேர்வு செய்தாலும், காலை அல்லது மதியம் ஒரு அமர்வை பயிற்சி செய்யலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்காதீர்கள். டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் நடந்திருந்தால் நீங்கள் இங்கே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருப்பீர்கள், ஆனால் மூன்றே நாட்களில் டெஸ்ட் போட்டியை விளையாடி உள்ளீர்கள் ”என்று கவாஸ்கர் கூறினார்.


மேலும் பேசிய அவர் இந்த டெஸ்ட் போட்டியின் போது பேட்டர்களோ அல்லது பந்து வீச்சாளர்களோ இந்த போட்டியில் ரிதம்மில் இருப்பதாக  பார்க்கவில்லை என்று கூறினார்.


இதையும் படிங்க: Ravi shastri : கம்மின்சை பார்த்து கத்துக்கோங்க ரோகித்... இப்படி ஆடவே கூடாது.. ரவி சாஸ்திரி அட்வைஸ்










"நீங்கள் ரன்களை எடுக்காததால்,ரிதமிற்கு வருவதற்கு நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதிய போட்டி நுணுக்கம் கிடைக்கவில்லை. நடுவில் நேரம் தேவைப்படும் மற்றவர்களும் இந்த நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும், ”என்று கவாஸ்கர் கூறினார்.


“இந்த விருப்ப பயிற்சி முறைய நான் ஆதரிக்கவில்லை. விருப்பப் பயிற்சிக்கான முடிவு கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருக்க வேண்டும். பயிற்சியாளர் சொல்ல வேண்டும், 'ஏய், நீ 150 அடித்தாய், நீ பயிற்சிக்கு வரத் தேவையில்லை. ஏய், நீ மேட்ச்சில் 40 ஓவர்கள் வீசினாய், நீ பயிற்சிக்கு வரத் தேவையில்லை.' இவ்வாறு அவர்களுக்கு விருப்பம் தரக்கூடாது. அந்த விருப்பத்தை வீரர்களுக்குக் கொடுத்தால், அவர்களில் பலர், நான் என் அறையில் தங்கப் போகிறேன்' என்று கூறுவார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல” என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.