பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இல் ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்திய அணியை கேப்டன்  ரோஹித் ஷர்மா வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரிந்துரைத்தார் .


அடிலெய்டு டெஸ்ட்: 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியை  ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. இப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது என்றே சொல்லலாம். இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் எடுத்தது. 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது, ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, 19 ரன்கள் என்கிற இலக்கை ஆஸ்திரேலிய அணி 3 ஒவர்களில் எட்டியது.  இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்கிற கணக்கில் சமனில் உள்ளது.


ரவி சாஸ்திரி கருத்து: 


ரோகித் சர்மா இந்த போட்டியில் சற்று பணிந்து சென்றதாக ரவின் சாஸ்திரி கூறியிருந்தார் மேலும் " ரோகித் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் . அங்குதான் அவர் ஆக்ரோஷமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பார். இந்த போட்டியில் அவரது உடல் மொழியைப் பார்த்து அவர் கொஞ்சம் அடக்கமாக இருக்கிறார் என்று நினைத்தேன். அவர் இந்தப் போட்டியில் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை ஆனால் அவரை களத்தில் நான்  இன்னும் கொஞ்சம் ஈடுப்பட்டுடன் இருப்பதை  பார்க்க விரும்பினேன், கடந்த 10 ஆண்டுகளில் இதை தான் நடந்தது, நீங்கள் ஒன்றை இழக்கிறீர்கள், அடுத்ததை நீங்கள் வெல்வீர்கள், ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ”என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார். 


பேட் கம்மின்ஸ்சிடம் கற்றுக்கொள்ளலாம்: 


"பெர்த் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேசிய பேட் கம்மின்ஸின் வார்த்தைகளின் தேர்வு எனக்குப் பிடிக்கும் . நாங்கள் போதுமான அளவு இந்த போட்டியில்  இல்லை, ஆனால் ஸ்கோர்போர்டு காட்டியது போல் நாங்கள் மோசமாக விளையாடவில்லை என்று அவர் கூறினார். நான் வார்த்தைகளை நல்ல தேர்வு என்று சொல்வதற்குக் காரணம், அது எதைப் பற்றியது அல்ல. மக்கள் சொன்னார்கள் அல்லது எதைப் பற்றி எழுதினார்கள் என்பதை எடுத்துக்கொள்ளாமல் கம்மின்ஸ் செய்து காட்டினர். அதே போன்று இந்திய அணி அந்த பாடத்தை கற்றுக்கொண்டு ராகுலை மிடில் ஆர்டரில் ஆட வைக்க வேண்டும் எனவும் ரோகித் தொடங்க வேண்டும் என்று சாஸ்திரி கூறினார். 


இதையும் படிங்க: ACC U 19: பிராண்டிய புலிக்குட்டிகள்.. சீனியர் டீம்மாக மாறிய ஜூனியர் அணி.. மண்ணை கவ்விய இந்திய அணி


இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றவாது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது.