இந்தியா  vs பாரத் சர்ச்சை குறித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியா vs பாரத் சர்ச்சை பேச்சில் நுழைந்துள்ளார். தற்போது இது மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 


இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ”பாரதம் என்பதே அசல் பெயர் என்கிறார். இதை சொல்லவும் கேட்கவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். பாரத் என்ற பெயரை அரசும், பிசிசிஐயும் அதிகாரப்பூர்வமாக்க வேண்டும். அதன்படி, பாரதம் என்ற பெயரை இந்தியாவிற்கு பதிலாக பாரத கிரிக்கெட் அணி என்று அழைக்கலாம். நாடுகளின் பெயர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, பர்மாவின் பெயர் இப்போது மியான்மர். பாரத் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டால், இதனால் எந்த பிரச்சனையும் வராது என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். 


முன்னதாக, சேவாக் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு கடிதம் எழுதி, வீரர்கள் தங்கள் ஜெர்சியில் பாரத் என்று எழுத வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதீயர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர், எங்கள் அசல் பெயரை 'பாரத்' அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற நீண்ட காலமாகிவிட்டது.






இந்த உலகக் கோப்பையில் எங்கள் வீரர்கள் மார்பில் பாரத் என்ற பெயரே இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ (செயலாளர்) ஜெய் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று  X இல் பதிவிட்டார்.