இந்தியா – நியூசிலாந்து இடையே நேற்று டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல்நாளான நேற்று நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் அவுட் நியூசிலாந்து ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது வினோதமான முறையிலும், வித்தியாசமான முறையிலும் வீரர்கள் அவுட்டாவது வழக்கம். இந்த வரிசையில் நேற்று ஹென்றி நிகோல்ஸ் இணைந்தார். டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் டாம் லாதம், வில் யங் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் வில்லியம்சனும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, நான்காவது விக்கெட்டுக்கு ஹென்றி நிகோல்ஸ் களமிறங்கினார்.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் முதலில் களத்தில் நிற்க வேண்டும் என்று ஆடிய ஹென்றி நிகோல்ஸ் மைதானத்தில் நங்கூரம்போல நின்றார். கான்வே 26 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த டேரில் மிட்செலுக்கு தக்க ஒத்துழைப்பு அளித்தார். 83 ரன்களில் ஜோடி சேர்ந்த அதாவது 35வது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர்.
குறிப்பாக, ஹென்றி நிகோல்ஸ் பந்துகளை தடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். ஆட்டத்தின் 55.2வது ஓவரின்போது சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் வீசிய பந்தை ஹென்றி நிகோலஸ் விளாசியபோது அது எதிரில் நின்ற மற்றொரு பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்லின் பேட்டில் பட்டு பீல்டிங் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் லீசிடம் கேட்ச்சாக மாறியது. இதனால், மிகுந்த அதிர்ச்சியுடன் ஹென்றி நிகோல்ஸ் வெளியேறினார்.
அவர் 99 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 19 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் – ஹென்றி நிகோலஸ் ஜோடி சுமார் 20 ஓவர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், டாம் ப்ளெண்டல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்