எந்தவொரு செயலை நாம் செய்வதற்கும் வயதோ, நமது உடல் அமைப்போ தேவையில்லை. உண்மையான அர்ப்பணிப்பு இருந்தால் போதும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அதீத அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வசப்படும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
குறிப்பாக, கிரிக்கெட் விளையாடும்போது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுவதை காட்டிலும் ரசித்து விளையாடினாலே போதும் என்றே பல ஜாம்பவான் வீரர்கள் ரசித்து விளையாடுங்கள் என்றே அறிவுறுத்துவார்கள்.
இங்கிலாந்தின் ஜார்ஜ் மெக்மென்மை என்ற கிரிக்கெட் வீரர் பந்துவீச்சு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் உடல் எடை அதிகரித்து மிகுந்த பருமனாக காணப்படுவார். அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். அவர் மிகவும் மெதுவாக ஓடிவந்து பந்துவீசிய வீடியோவை பகிர்ந்துள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரில் ஸ்டெயின் “ நான் வாழ்வில் என்ன செய்தேன் என்று கேட்பவர்கள் இந்த வீடியோவை பாருங்கள். நான் அவரை கிண்டல் செய்யவில்லை. அவரின் உணர்வுகளை பகிர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் மெக்கென்மை தன்னை உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் என்று அவரே குறிப்பிட்டுக் கொள்கிறார். தன்னுடைய உடல் எடை காரணமாகவும், மோசமான பந்துவீச்சு ஸ்டைல் காரணமாகவும் அவர் இவ்வாறு தன்னை தானே கூறிக்கொள்கிறார். ஆனாலும், அவர் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவுர்.
மேலும், ஜார்ஜ் மெக்கன்மை கிரிக்கெட் மீது ஏன் தீராத காதல் கொண்டுள்ளேன் என்பதற்கும் டுவிட்டரில் விளக்கம் அளித்தள்ளார். அதில் அவர், “ மக்களே நான் ஒரு முட்டாளாக இருக்கலாம், நான் உலகின் மிக மோசமான கிரிக்கெட் வீரராக கூட இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டு என் உயிரைக் காப்பாற்றியது, என் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவும், என் அம்மாவை சொர்க்கத்தில் பெருமைப்படுத்தவும் ஒரு தளத்தைக் கொடுத்தது. ஐ லவ் யூ கிரிக்கெட்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஜார்ஜ் மெக்கென்மையை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்