Sri Lanka vs Pakistan LIVE: இலங்கை அணியின் சொதப்பலான பந்து வீச்சால் பாகிஸ்தான் இமாலய வெற்றி..

SL vs PAK World Cup 2023 LIVE Score: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

Continues below advertisement

LIVE

Background

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகள் அக்டோபர் 10 செவ்வாய் அன்று அதாவது இன்று நடைபெறுகிறது. முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இரண்டாவது போட்டியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 

பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், எதிர்பார்த்தபடி பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டதா என்றால் சந்தேகம்தான். முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அந்த அணிக்கு பல பிரச்சனைகள் உள்ளன, இதனால் அந்த அணி தனது இரண்டாவது போட்டியில் தோல்வியடையலாம்.  மறுபுறம், இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களின் போராட்டம் வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்றே கூறலாம். 

முதல் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நெதர்லாந்து போன்ற பலவீனமான அணிக்கு எதிராக கூட பாகிஸ்தானால் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியவில்லை. அந்த அணி 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரன்களை விரட்டிய நெதர்லாந்து அணி 205 ரன்களை எட்டியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணிக்கு பெரிய பலம் இல்லை. 

இப்படிப்பட்ட நிலையில் இன்று ஆசியாவின் இந்த இரண்டு பெரிய அணிகளுக்கு இடையேயான போட்டி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியின் போது இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் கடைசியாக சந்தித்தனர். இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் vs இலங்கை: நேருக்கு நேர்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 156 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 92 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தில் உள்ளது.  இலங்கை 59 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, பதிவுகளின்படி, பாகிஸ்தானிம் கை ஓங்கி இருக்கிறது. 

பிட்ச் அறிக்கை: 

ஹைதராபாத் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாகவே இருந்துள்ளது. இங்கு நடந்த கடந்த ஐந்து ஆட்டங்களில் இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 296 ஆக இருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றும் இரு அணிகளும் அதிக ஸ்கோரிங் செய்யலாம். இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம். 

கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி: 

இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.

கணிக்கப்பட்ட இலங்கை அணி: 

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (வி.கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெலலெஜ், மதிஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித.

 

Continues below advertisement
23:07 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் பெற்ற தோல்வியால் இலங்கை அணி 8வது இடத்திலும் உள்ளன. 

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 

23:05 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: அடுத்த போட்டி எப்போது..

இலங்கை அணிக்கு அடுத்த போட்டி அக்டோபர் 16ஆம் தேதி லக்னோவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணிக்கு வரும் 14ஆம் தேதி அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

23:02 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: சிக்ஸர்களின் எண்ணிக்கை

இரு அணிகளும் இணைந்து மொத்தம் 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளன. இதில் இலங்கை அணி அதிகபட்சமாக 9 சிக்ஸர்கள் விளாசியது. 

23:01 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: இந்த போட்டியில் மொத்த பவுண்டரிகள்..

இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தம் 62 பவுண்டரிகள் விளாசியுள்ளது. இதில் இலங்கை அதிகபட்சமாக 36 பவுண்டரிகள் விளாசியுள்ளது.. 

22:59 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: ஆட்ட நாயகன்..

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஸ்வானுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 121 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 131 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். 

22:57 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: தொடரும் இலங்கையின் சோக வரலாறு

இலங்கை அணி இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்து 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணியால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தவே முடியவில்லை எனும் சோக வரலாறு தொடர்கிறது. 

22:32 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: இலங்கை அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..

இலங்கை அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பத்திரானா. இவர் மட்டும் வைய்டு மூலம் 18 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதேபோல் தீக்‌ஷனா 5 ரன்கள் வைய்டு மூலம் விட்டுக்கொடுத்தார். 

22:28 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தான் வெற்றி..

இறுதியில் பாகிஸ்தான் அணி  48.2  ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிரான அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. அதேபோல் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

22:11 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: வெற்றியை நெருங்கும் பாகிஸ்தான்..

பாகிஸ்தான் அணி 45 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 31 ரன்கள்தான் தேவை. 

21:51 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: சதம் விளாசிய ரிஸ்வான்..

மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ரிஸ்வான் 97 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதம் விளாசியுள்ளார். 

21:48 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: முடிந்தது 40 ஓவர்கள்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு..

40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணி வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் தேவை. அதேபோல் இலங்கை வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை அல்லது ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்த வேண்டும். 

21:35 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள்..

சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் பாகிஸ்தான் வெற்றி பெற 12 ஓவர்களில் 90 ரன்கள் தேவை. 

21:31 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 250 ரன்களைக் கடந்த பாகிஸ்தான்..

பாகிஸ்தான் அணி 37 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:29 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: தசைப் பிடிப்பால் அவதிப்படும் ரிஸ்வான்..

81 பந்தில் 89 ரன்கள் குவித்த ரிஸ்வான் சிக்ஸர் அடித்தபோது தனது வலது காலில் தசைப் பிடிப்பால் அவதிக்குள்ளானார். 

21:24 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும்..

பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 85 பந்தில் 107 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. 

21:17 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: வைய்டுகளில் ரன்களை வாரிக்கொடுக்கும் பத்திரனா

பத்திரனா இதுவரை 6 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார். அதில் வைய்டில் மட்டும் மொத்தம் 14 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். 

21:10 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: வலுவான கூட்டணி முறிந்தது...

156 பந்துகளில் 176 ரன்கள் குவித்த அப்துல்லா மற்றும் ரிஸ்வான் கூட்டணியை பத்திரனா போட்டியின் 34வது ஓவரில் பிரித்தார். 

21:08 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: அப்துல்லா அவுட்..

சதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த அப்துல்லா தனது விக்கெட்டினை பத்திரனா பந்து வீச்சில் இழந்து வெளியேறியுள்ளார். 

21:06 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: சதம் விளாசிய அப்துல்லா; அரைசதம் கடந்த ரிஸ்வான்

தொடக்க வீரர் அப்துல்லா தனது சதத்தினை பூர்த்தி செய்தும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஸ்வான் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர். 

20:32 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 150 ரன்களை எட்டிய பாகிஸ்தான்..

27 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:31 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 26 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்

26 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் அப்துல்லா 70 ரன்களுடனும் ரிஸ்வான் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

20:20 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் - இலங்கை

உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளது. இதில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. 

20:17 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தானுக்கு 220 ரன்கள் தேவை

பாகிஸ்தான் அணி வெற்றி பெற 27 ஓவர்களில் 220 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. 

20:10 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 120 ரன்களை எட்டிய பாகிஸ்தான்..

21 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:09 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: பவுண்டரிகளில் கவனம் செலுத்தும் பாகிஸ்தான்..

345 ரன்கள் என்ற இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 16வது ஓவரில் இருந்து பவுண்டரிகளில் ரன்கள் குவிக்க கவனம் செலுத்தி வருகின்றது. 

20:07 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 20 ஓவர்களை பூர்த்தி செய்த இரண்டாவது இன்னிங்ஸ்

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:04 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: அரைசதம் விளாசிய அப்துல்லா..

தொடக்க வீரராக களமிறங்கி 58 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி தனது இரண்டாவது சர்வதேச அரைசதத்தினை பூர்த்தி செய்துள்ளார் அப்துல்லா. 

20:02 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 100 ரன்களை எட்டிய பாகிஸ்தான்

சரிவில் இருந்து மீண்டு வரும் பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:59 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 90களில் பாகிஸ்தான்..

2 விக்கெட்டுகளை இழந்த சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் சேர்த்துள்ளது. அப்துல்லா அரைசதத்தினை நெருங்கி வருகிறார். 

19:58 PM (IST)  •  10 Oct 2023

WC 2023 SL Vs Pak LIVE Score: 50 ரன்களைக் கடந்த பார்ட்னர்ஷிப்

பொறுப்புடன் விளையாடி வரும் ரிஸ்வான் மற்றும் அப்துல்லா கூட்டணி 61 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது. 

19:54 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 50 ரன்களை நெருங்கும் பார்ட்னர்ஷிப்

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஸ்வான் கூட்டணி 58 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:50 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 50 பந்துகளை எதிர்கொண்ட பார்ட்னர்ஷிப்..

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஸ்வான் கூட்டணி 50 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:48 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்

15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:40 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும்..

பாகிஸ்தான் வெற்றிபெற 36 ஓவர்களில் 276 ரன்கள் தேவை. பாகிஸ்தான் அணி தற்போது 14 ஓவர்கள் முடிவில் 69 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:34 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தானின் ரன்ரேட்

2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 4.69ஆக உள்ளது. 

19:25 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 50 ரன்களைக் கடந்த பாகிஸ்தான்..

2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 51 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:21 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 50 ரன்களை நெருங்கும் பாகிஸ்தான்

10.1 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:19 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 10 ஓவர்கள் முடிவில்

10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:12 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 9 ஓவர்களில் பாகிஸ்தான்..

9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:04 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: தொடர்ந்து சொதப்பும் பாபர் அசாம் அவுட்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தனது விக்கெட்டினை 12 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

19:03 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: முதல் இன்னிங்ஸில் இலங்கை விளாசிய பவுண்டரிகள் எண்ணிக்கை

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் மொத்தம் 36 பவுண்டரிகள் விளாசியுள்ளது. அதிகபட்சமாக மென்டிஸ் 14 பவுண்டரிகள் விளாசினார். 

18:50 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 5வது ஓவர் முடிவில் பாகிஸ்தான்..

5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 22 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:47 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: களமிறங்கியதும் பாபர் பவுண்டரி..

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் களமிறங்கியதும் தான் எதிர்கொண்ட முதல் பந்தினை பவுண்டரிக்கு விரட்டி அமர்க்களப்படுத்தியுள்ளார். 

18:45 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: விக்கெட் வேட்டையைத் துவங்கிய இலங்கை..

இலங்கை அணியின் தில்சாம் மதுசன்கா வீசிய போட்டியின் 4வது ஓவரின் 3வது பந்தில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 16. 

18:38 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்

2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:32 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சுழலுடன் தொடங்கும் இலங்கை

இலங்கை அணியின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனா வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் சேர்த்தது. 

18:30 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: களமிறங்கியது பாகிஸ்தான்

345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கியுள்ளனர். 

18:29 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: பாகிஸ்தான் அணிக்கு எதிராக சம்பவம் செய்த இங்கிலாந்தும் இலங்கையும்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஒரே போட்டியில் சதம் விளாசினர். அதேபோல் 2023 தொடரில் இலங்கை அணியின் குஷால் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரம 108 ரன்களும் குவித்தனர். 

18:15 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: தொடர்ந்து 300 ரன்களைக் கடந்த இலங்கை..

உலகக் கோப்பை 2023 தொடரி இலங்கை அணி தான் களமிறங்கிய இரண்டு போட்டியிலும் 300ஐக் கடந்து ரன்கள் குவித்து தனது பலமான பேட்டிங் வரிசையை வெளிப்படுத்தியுள்ளது. 

17:59 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 345 ரன்கள் இலக்கு..

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 345 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

17:56 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: டக் அவுட் ஆகி வெளியேறினார் தீக்‌ஷனா

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனா 4 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை ஹாரீஸ் ராஃபிடம் இழந்து வெளியேறினார். 

17:54 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 350 ரன்களை எட்டுமா இலங்கை..

49 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் சேர்த்துள்ளது. 350 ரன்களை எட்டுமா என எதிர்பார்க்கப்படுகின்றது. 

17:48 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சதம் விளாசிய சமரவிக்ரம அவுட்

சிறப்பாக விளையாடி வந்த சமர விக்ரம 89 பந்தில் 108 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

17:36 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சதம் விளாசினார் சமரவிக்ரம

மிடில் ஆர்டரில் களமிறங்கி 82 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி தனது சத்தினை எட்டியுள்ளார் சமரவிக்ரம

17:34 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 99 ரன்களில் சமரவிக்ரம

81 பந்துகளில் சமரவிக்ரம 99 ரன்கள் சேர்த்து சதத்தினை நெருங்கியுள்ளார். 

17:26 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 300 ரன்களை எட்டிய இலங்கை...

43.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:16 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சிறப்பான பார்னர்ஷிப் பிரிந்தது..

5வது விக்கெட்டுக்கு இணைந்த சமரவிக்ரம மற்றும் தனஞ்செயா டி சில்வா கூட்டணி 66 பந்தில் 65 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்துள்ளது. டி சில்வா 34 பந்தில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். 

17:14 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 290 ரன்களை எட்டிய இலங்கை..

சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 41 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் விளையாடி வருகின்றது. 

17:12 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 40 ஓவர்கள் முடிவில் இலங்கை

40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:57 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: ரன் குவிப்பில் மிரட்டும் இலங்கை..

இலங்கை அணி 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

16:50 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 250 ரன்களை எட்டிய இலங்கை..

சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 35.1 ஓவர் முடிவில் 251 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணியின் தற்போதைய ரன்ரேட் 7.07 ஆக உள்ளது. 

16:47 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 250 ரன்களை நெருங்கும் இலங்கை

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 35 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

16:43 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: இலங்கையின் தற்போதய ரன்ரேட்..

34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்துள்ள இலங்கை அணியின் தற்போதைய ரன்ரேட்7.18ஆக உள்ளது. 

16:42 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அரைசதம் விளாசிய சமரவிக்ரம

சிறப்பாக விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சமரவிக்ரம 43 பந்தில் தனது அரைசத்தினை எட்டி சிறப்பாக விளையாடி வருகிறார். 

16:35 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அரைசதத்தை நெருங்கும் சமரவிக்ரம

இலங்கை அணியின் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சமரவிக்ரமா 32வவது ஓவர் முடிவில் 38 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 46 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளார். 

16:31 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹசன் அலி

7 ஓவரில் 50 ரன்களை வாரிக் கொடுத்திருந்தாலும், ஹசன் அலி இதுவரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

16:28 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 4 விக்கெட்டினை இழந்த இலங்கை..

இலங்கை அணி தனது 4வது விக்கெட்டினை இழந்துள்ளது. 31வது ஓவரின் முதல் பந்தில் அசலங்கா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

16:22 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 3வது விக்கெட்டினை இழந்தபோது இலங்கை..

இலங்கை அணி தனது 3வது விக்கெட்டினை 218 ரன்களாக இருந்தபோது இழந்துள்ளது. 

16:20 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: குஷால் மெண்டிஸ் அவுட்..

ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டினை சிக்ஸ் லைனில் இழந்து வெளியேறினார். இவர் 77 பந்துகளில் 14 பவுண்டரி 6 சிக்ஸ் விளாசியுள்ளார். 

16:16 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: குஷால் மெண்டிஸ் ஸ்ட்ரைக் ரேட்..

குஷால் மெண்டிஸ் 75 பந்துகளில் 116 ரன்கள் குவித்து 154.67 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகின்றார். 

16:13 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அதிரடியாக 200 ரன்களை எட்டிய இலங்கை

இலங்கை அணி 28வது ஓவரில் 2 விக்கெட்டினை இழந்து 202 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது. 

16:11 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 199 ரன்கள் குவித்த இலங்கை..

27 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

16:07 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சதம் விளாசிய குஷால் மெண்டிஸ்..

தொடக்கம் முதல் அதிரடியாக ரன்கள் குவித்து வந்த தொடக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் 65 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உட்பட தனது சதத்தினை விளாசியுள்ளார். 

16:06 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 26 ஓவர்கள் முடிவில்..

அதிரடியாக ரன்கள் குவித்து வரும் இலங்கை அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 186 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:03 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: சதத்தை நெருங்கிம் குஷால் மெண்டிஸ்

61 பந்துகளில் 92 ரன்கள் குவித்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் சதத்தினை எட்டும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளார். 

16:01 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய குஷால் மெண்டிஸ்

போட்டியின் 25வது ஓவரினை வீசிய அஃப்ரிடியின் ஓவரில் குஷால் மெண்டிஸ் அதிரடியாக ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி மிரட்டியுள்ளார். 

15:58 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 40 பந்துகளில் 60 ரன்கள்..!

மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த சமரவிக்ரமா மற்றும் குஷால் மென்டிஸ் கூட்டணி 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அதிரடி ரன் குவிப்பில் சிறப்பாக விளையாடி வருகின்றது. 

15:50 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: தண்டிக்கப்படும் பாகிஸ்தான் பவுலர்கள்..

இலங்கை அணி தரப்பில் 22.2வது ஓவர் வரை 19 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். 

15:49 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அதிரடி ரன் குவிப்பில் இலங்கை..

சீராக பவுண்டரிகள் விளாசி வரும் இலங்கை அணி 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. இலங்கை அணியின் ரன்ரேட் தற்போது 7ஆக உள்ளது. 

15:47 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 150 ரன்களை எட்டிய இலங்கை..

22வது ஓவரில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

15:47 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்கவிடும் இலங்கை..

இலங்கை அணியின் சமவீரா மற்றும் மெண்டிஸ் போட்டியின் 21வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசி அதகளப்படுத்தி வருகின்றனர். 

15:43 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: மிரட்டும் இலங்கை..

20.3 ஓவர்களில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றது. 

15:33 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது..

19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. 

15:32 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அரைசதம் கடந்து பொறுப்பாக விளையாடும் மெண்டிஸ்

தொடக்க வீரராக களமிறங்கி 42 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் இலங்கை அணியின் முதல் போட்டியிலும் அரைசதம் விளாசினார். 

15:29 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: விக்கெட் விழுந்தாலும் குறையாத ரன் சேர்ப்பு

18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. அணியின் தற்போதைய ரன்ரேட் 6.22ஆக உள்ளது. 

15:27 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 100 ரன்களை கடந்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது..

இலங்கை அணி நிஷாங்கா மற்றும் மெண்டிஸ் கூட்டணி 102 ரன்கள் சேர்த்த நிலையில் பாகிஸ்தானின் ஷதாப் பந்தில் பிரிந்தது. 

15:25 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: அரைசதம் எட்டியதும் தனது விக்கெட்டினை இழந்த நிஷங்கா

இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நிஷாங்கா 61 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

15:24 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 100 ரன்களை கடந்த இலங்கை..!

சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது. 

15:15 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 15 ஓவர்கள் முடிவில் இலங்கையின் ரன்ரேட்..

15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் குவித்துள்ளதால் அதன் ரன்ரேட் 6ஆக உள்ளது. 

15:13 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 90 ரன்களை எட்டிய இலங்கை..

சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. 

14:55 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 11 ஓவர்கள் முடிவில்... இலங்கை

11 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது. 

14:52 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL Vs Pak LIVE Score: 50 ரன்களைக் கடந்த பார்ட்னர்ஷிப்

5 ரன்களில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்த இலங்கை அணியை அதன் பின்னர் சீராக வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் விளையாடி வரும் மெண்டிஸ் மற்றும் பதும் நிஷ்கண்ணா தனது கூட்டணி இதுவரை 51 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். 

14:47 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 SL vs Pak LIVE Score: 50 ரன்களை எட்டிய இலங்கை..

ஒரு விக்கெட்டினை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் சேர்த்து சீராக ரன்கள் சேர்த்து வருகின்றது. 

14:45 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 Sri Lanka vs Pakistan LIVE Score: முதல் விக்கெட் பறிபோனது எப்போது...

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் பெராரா தனது விக்கெட்டினினை ரன் ஏதும் எடுக்காமல்  தனது விக்கெட்டினை அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தபோது இழந்து வெளியேறினார். 

14:41 PM (IST)  •  10 Oct 2023

ICC WC 2023 Sri Lanka vs Pakistan LIVE Score: பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இலங்கை; 8 ஓவர்கள் வரை எவ்வளவு ரன்கள்

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.