பால்பிரைன் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்களை குவித்தது. அயர்லாந்து அணி தற்போது ஆட்டத்தை டிரா செய்ய போராடி வருகிறது


அதிவேக 50 டெஸ்ட்:


இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் இரு அணி தரப்பிலும் இரட்டை சதங்களையும், சதங்களையும் விளாசியுள்ள நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு பிரபாத் ஜெயசூர்யா 43 விக்கெட்டுகளுடன் களமிறங்கினார். அயர்லாந்தின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், அயர்லாந்தின் 2வது இன்னிங்சில் தற்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஆடி வருகிறார்.


இந்த போட்டியில் அவர் 7வது விக்கெட்டை கைப்பற்றியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 50வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.  ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 50 விக்கெட்டுளை கைப்பற்றிய வீரர், இலங்கை அணிக்காக அதிவேகமாக டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார்.   


இலங்கை வீரர் பிரபாத்:


ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவினவ் வேகப்பந்துவீச்சாளர் சார்லி டர்னர் தன்வசம் வைத்துள்ளார். சார்லி டர்னர் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளிலே டெஸ்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


பிரபாத் ஜெயசூர்யா 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பிரபாத் ஜெயசூர்யா மட்டுமின்றி இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன், இங்கிலாந்தில் பிலாண்டர் ஆகியோரும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அஸ்வின் தன்வசம் வைத்துள்ளார். அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இந்த புதிய வரலாறை படைத்துள்ள ஜெயசூர்யா கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 31 வயதான பிரபாத் ஜெயசூர்யா 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவர் இலங்கை அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.


மேலும் படிக்க: Watch Video: 'குறுக்க இந்த கௌசிக் வந்தா..?' கேப்டன் கூல் தோனியையே கோபப்படுத்திய பதிரானா..! வைரலாகும் வீடியோ..!


மேலும் படிக்க: LSG vs PBKS: அதிரடி வெற்றி பெறுமா பஞ்சாப்? புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!