தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய 40-வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கிறது. 




இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் முன்னாள் துணை டெஸ்ட் கேப்டன் ரஹானே புது சாதனை ஒன்றை படைக்க இருக்கின்றனர். கோஹ்லி மற்றும் ரஹானே இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்ச்களை எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைய இருக்கின்றனர். 


100 கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு 2 கேட்ச்சுகளும், ரஹானேக்கு ஒரு கேட்ச்சும் தேவையாக உள்ளது. இவர்கள் இருவரும் இந்த போட்டியில் இந்த கேட்ச்களை பிடிக்கும் பட்சத்தில் 100 க்கு மேற்பட்ட கேட்சுகள் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 6 மற்றும் 7 ம் இடத்தை பிடிப்பர். 




இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 5 இந்திய வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 210 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார். VVS லக்ஷ்மண், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் முறையே 135, 115, 108 மற்றும் 105 கேட்சுகளுடன் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கோஹ்லியும், ரஹானேவும் 100 கேட்ச் சாதனையை முறியடிக்கலாம். இந்தியா தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, மேலும் தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியிலும் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண