இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது சமூக வலைதளங்களில் எப்போதும் வைரல் தான். அதிலும் குறிப்பாக அந்த விஷயத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கு போட்டால் அது மெகா ஹிட் தான். அதிலும் புத்தாண்டில் தற்போது முதல் முறையாக தோனியின் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப்பதிவில் தல மகேந்திரங் தோனியின் படம் ஒன்றை சிஎஸ்கே பதிவிட்டுள்ளது. அதில் தோனி தன்னுடைய குதிரையுடன் விளையாடும் வகையில் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதிவு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பலரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது. இந்த படம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த மாதம் 12ஆம் தேதி சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் தோனியின் படம் ஒன்று பதிவிட்டப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் தல மகேந்திர சிங் தோனியின் படம் ஒன்றை சிஎஸ்கே கணக்கு பதிவிட்டிருந்தது. மேலும் அப்பதிவில், ‘மின்சார கண்ணா’ என்ற வசனத்தையும் பதிவிட்டிருந்தது.
இந்த பதிவு ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று போடப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பதிவு அப்போது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் புத்தாண்டில் தல தோனியின் புதிய படம் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு பலரும் லைக் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ”எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..” : 6 ஆண்டுகளாக தொடரும் இந்திய டெஸ்ட் அணியின் சாதனை !