இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு சூப்பர் ஸ்போர்ட் பார்க், சென்ட்ஜூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தது.
விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணியில் ஆடும் லெவன் யார் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மயங்க் அகர்வால் மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், தொடர்ந்து பார்ம் அவுட்டில் உள்ள ரஹானே, புஜாரா இந்த போட்டியில் அமர வைக்கப்படலாம். இவர்களுக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இந்திய ஏ அணியில் கலக்கிய ஹனுமான் விஹாரி களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி 4 வது இடத்தில் களமிறங்கினால், விக்கெட் கீப்பர் பண்ட் 6 இடத்தில் இறங்குவார்.
பந்து வீச்சாளர்கள் பொறுத்தவரை இந்திய அணியின் அனுபவ வீரர் அஸ்வின், சர்துல் தாகூர் ஆல் - ரவுண்டராக களமிறங்குவர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ,முகமது சமி வாய்ப்பு வழங்கப்பட்டால் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் சிராஜ் இவர்களில் யாரேனும் ஒருவர் அணியில் இடம் பெறலாம்.
தென்னாப்பிரிக்கா அணியில் அனுபவ வீரர்கள் என்று பார்க்கும்போது, கேப்டன் டீன் எல்கர், பவுமா, டி காக் தவிர பெரிதாக யாரும் இல்லை. எனவே, இந்த முறை நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி கோலி படை களமிறங்கும்.
ஆனால், சொந்த நாட்டு மைதானம் என்பதால் தென்னாப்பிரிக்கா அணி அவ்வளவு எளிதாக தோல்வியை விட்டுக்கொடுக்காது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை வண்டர் டி குசைன் பார்மில் உள்ளதால் இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு மிக பெரிய தலைவலியாக இருப்பார்.
செஞ்சுரியன் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா இதுவரை26 டெஸ்டில் விளையாடி 21 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டியை 'டிரா செய்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 2ல் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்