South Africa vs India, 1st Test Live : தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சதம்..! கே.எல்.ராகுல் அபாரம்..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முகேஷ் Last Updated: 26 Dec 2021 08:10 PM
தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சதம்..! கே.எல்.ராகுல் அபாரம்..!

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் தற்போது வரை 110 ரன்களுடனும், ரஹானே 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. 

நிதானமாக ஆடிய விராட்கோலி அவுட்..!

இந்திய அணிக்காக மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கேப்டன் விராட்கோலி 94 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். 

நிதானமாக ஆடும் கே.எல்.ராகுல் - கோலி கூட்டணி...!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணிக்காக மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், கேப்டன் விராட்கோலியும் மிகவும் நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி வருகின்றனர். கே.எல்.ராகுல் 72 ரன்னுடனும், விராட்கோலி 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

புஜாரா டக் அவுட்...! அரைசதம் அடித்த அகர்வாலும் அவுட்...! கோலி - ராகுல் கூட்டணி காப்பாற்றுமா?

தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா முதல் பந்திலே கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். தற்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களுடன் இந்தியா ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் விராட்கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

நிதானமாக ஆடும் மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் ஜோடி...!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இந்திய அணி உணவு இடைவேளை வரை நிதானமாக ஆடி 83 ரன்களுடன் ஆடி வருகிறது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 46 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Background

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


அணி விவரம் பின்வருமாறு : 


 


 





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.