Matthew Breetzke: அறிமுக போட்டியிலே இப்படியா? ஒருநாள் கிரிக்கெட்டில் புது சகாப்தம் படைத்த மேத்யூ ப்ரிட்ஸ்கே!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றிலே அறிமுக போட்டியிலே அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரிட்ஸ்கே படைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இணைந்து பாகிஸ்தான் அணியும் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று லாகூர் மைதானத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
அசத்தல் தொடக்கம்:
Just In




இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுக வீரராக மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார். 26 வயதான அறிமுக வீரர் ப்ரிட்ஸ்கே கேப்டன் பவுமாவுடன் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பவுமா 20 ரன்களில் அவுட்டாக, அடுத்துவந்த ஜேசன் ஸ்மித்துடன் இணைந்து ப்ரிட்ஸ்கே ஆடினார்.
அறிமுக போட்டி போல அல்லாமல் இளம் வீரர் மேத்யூ ப்ரிட்ஸ்கே நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடினார். நியூசிலாந்தின் மேத் ஹென்றி, வில்லியம் ஓரோர்க்கி, அனுபவமிக்க கேப்டன் சான்ட்னர் ஆகியோர் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு பவுண்டரிகளாக விளாசினார்.
அறிமுக போட்டியிலே சதம்:
ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், அவ்வப்போது சிக்ஸரும் விளாசிய ப்ரிட்ஸ்கே அரைசதம் விளாசினார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜேசன் ஸ்மித் 41 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூ ப்ரிட்ஸ்கே சதம் விளாசினார். அறிமுகப் போட்டியிலே சதம் விளாசிய ப்ரிட்ஸ்கே 100 ரன்களை கடந்த பிறகும் தனது ரன் வேட்டையத் தொடர்ந்தார்.
அபாரமாக ஆடிய ப்ரிட்ஸ்கே தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி 150 ரன்களை எட்டினார். இறுதியில் அவர் மேத் ஹென்றி பந்தில் 150 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் 148 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 150 ரன்களை எடுத்தார்.
புது சகாப்தம்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கும் 1971ம் ஆண்டு முதல் தற்போது அறிமுக போட்டியிலே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை மேத் ப்ரிட்ஸ்கே படைத்துள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் 148 ரன்களுடன் 1978ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுக போட்டியிலே சதம் விளாசிய 3வது வீரர் ப்ரிட்ஸ்கே ஆவார். இதற்கு முன்பு தெம்பா பவுமா, ஹென்ட்ரிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது அறிமுக ஒருநாள் போட்டியிலே சதம் அவித்து அசத்தியுள்ளனர்.
விசித்திர சாதனை:
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புது சகாப்தம் படைத்துள்ள மேத்யூ ப்ரிட்ஸ்கேவிற்கு ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேத்யூ ப்ரிட்ஸ்கே இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். அதில் அவர் வெறும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி, ஒருநாள் போட்டியில் தனது அறிமுக போட்டியில் சதம் விளாசிய ஒரே வீரரும் மேத்யூ ப்ரிட்ஸ்கே மட்டுமே ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.