மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமித்த தேர்வாளர்களின் முடிவு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித்தின் உடற்தகுதி விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது, மேலும் ஷிவ் சுந்தர் தாஸ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, போட்டியின் காலையில் வழக்கமான கேப்டன் தகுதியற்றவராக மாறினால், அனுபவம் வாய்ந்த ரஹானேவை துணைக்கு வைத்திருப்பது அணிக்கு சாதகமானது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாளர்கள் துணை கேப்டனை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹானேவிற்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கங்குலி கூறியதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது, "இந்த முடிவு இந்திய அணிக்கு பின்னடைவானது என நான் சொல்ல மாட்டேன். ரஹானே 18 மாதங்கள் இந்திய அணிக்காக விளையாடாமல் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். அதன் பின்னர் அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரு டெஸ்டில் விளையாடிய பின்னர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுளார். அதன் பின்னால் உள்ள சிந்தனை செயல்முறை எனக்கு புரியவில்லை. அணியில் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார், அவர் நீண்ட காலமாக மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உறுதியாக இருக்கிறார், மேலும் இக்கட்டான சூழலில் அணிக்கு கைகொடுக்கும் அளவிற்கு அவர் செயல்பட்டுள்ளார், தேர்வுக்குழு ஜடேஜாவிற்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்காமல் போனதற்கு காரணம் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ”ஒரு வீரரை உடனடியாக துணை கேப்டனாக மாறுவது எனக்குப் புரியவில்லை. எனது ஒரே கருத்து என்னவென்றால், தேர்வு என்பது தற்போதைய போட்டியை மையப்படுத்தி இருக்கக்கூடாது. தேர்வில் தொடர்ச்சியும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்,” என்று கங்குலி மேற்கோளிட்டுள்ளார்.
ரஹானே ஒரு "ஸ்டாப்-கேப் ஏற்பாடு" அதாவது தற்போதைய நிலையை சீர் செய்வதற்கான ஏற்பாடு என்றும், டிசம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் தொடருக்கு கேஎல் ராகுல் இருந்தால் தொடர மாட்டார் என்று ஊடகங்களில் தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன், ரோஹித்தின் உடற்தகுதி அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயமாக இருந்து வருகிறது, இருப்பினும் அவர் முழு சுற்றுப்பயணத்திற்கும் இருப்பார் என்று தேர்வாளர்களிடம் கூறியதாகவும், இருப்பினும், ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது, தேர்வாளர்களின் நிலைப்பாட்டினை காட்டுகிறது.
2022 பிப்ரவரியில் முழுநேரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து இந்திய அணியின் கேப்டன் இதுவரை மூன்று டெஸ்டுகளைத் தவறவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டி மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
கபில் தேவ் கூட இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ரோஹித்தின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார், மேலும் கேப்டன் "உடற்தகுதி குறித்து ரோகித் கடின உழைப்பைச் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.