டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிந்து நாக்-அவுட் சுற்றின் முதல் அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு செய்தது. 167 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 


இந்நிலையில், இந்த போட்டியில் மேட்ச் வின்னிங் ஸ்கோர் அடித்த டேரில் மிட்சல், கிரிக்கெட் உலகில் மிகவும் பரிச்சயமான பெயராக இருந்திருக்கவில்லை. நேற்றைய போட்டியில், டேரில் மிட்சல் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவரது இன்னிங்ஸை பார்த்து கொண்டிருந்த பிரபல வர்ணனையாளர் சைமன் டவுல், “டேரில் மிட்சலின் ஆட்டம் எனக்கு தோனியை நினைவுப்படுத்துகிறது. ஒரு முறை தோனி என்னிடம் இப்படி சொல்லி இருக்கிறார். சிறந்த ஃபினிஷர், சிறந்த வீரர் எம்.எஸ் தோனி. எவ்வளவு நேரம் களத்தில் நின்று ஆட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் எதிரணி வீரர்களும், பவுலருக்கும் அழுத்தம் உண்டாகும்” என அவர் தெரிவித்தார். 






தோனி சொன்ன இந்த வாக்கியங்களை மிட்சல் இப்போது கண் முன்னே நிகழ்த்தி கொண்டிருப்பதாகவும், அப்படியொரு ஃபினிஷிங் ஆட்டத்தைதான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் எனவும் சைமன் புகழாரம் பாடினார். 


சேஸிங்கின்போது, மார்டின் குப்தில், டேரில் மிட்சல் ஓப்பனிங் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே குப்தில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து பின் தங்க ஆரம்பித்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்சனும் ஆட்டமிழக்க, டேவன் கான்வே பேட்டிங் களமிறங்கினார்.  கான்வே 46 ரன்கள் எடுக்க, டேரில் மிட்சல் 72 ரன்கள் எடுக்க, கடைசியில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷமும், 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோருக்கு பங்காற்ற நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண