மோசடி வழக்கு: 


இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஷுப்மான் கில், 'சிட் ஃபண்ட் மோசடி'யில் கைது செய்யப்படும் அபாயத்தில் உள்ளார். 450 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் கில், மற்றும் 3 குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு, குஜராத் சிஐடியிடம் இருந்து சம்மன் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் மற்ற குஜராத் வீரர்களான  மோஹித் சர்மா, ராகுல் தெவாடியா மற்றும் சாய் சுதர்ஷன் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 


குற்றவாளியின் வாக்குமூலம்: 


இந்த வழக்கில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட பூபேந்திரசிங் ஜாலாவை  என்பவரை அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி  குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று கூறி, இந்த நான்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் கொடுத்தார்.


இதையும் படிங்க: Sports Calendar 2025: இந்த வருஷமும் நமக்கு தான்! சாம்பியன்ஸ் டிராபி முதல் கபடி உலககோப்பை வரை.. மிஸ் பண்ணாம பாருங்க


இதில் ஷுப்மான் கில் இந்த திட்டத்தில் ரூ. 1.95-கோடி முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது, மற்ற கிரிக்கெட் வீரர்கள் சிறிய முதலீடு செய்தனர் என்றும் தெரிவித்தார்.


நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு:


"இந்த வழக்கில் மேத்தா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜாலாவின் முறைசாரா கணக்கு புத்தகங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய கணக்காளர்கள் குழுவை நாங்கள் தயார் செய்துள்ளோம். மேலும் இதனை சிஐடி அதிகாரிகள் காவலில் எடுத்து சோதனை நடத்தினர். திங்கட்கிழமை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது," என்று ஒரு அதிகாரி கூறினார். 


இதையும் படிங்க: Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?


பூபேந்திரசிங் ஜாலா ரூ.6000-கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்றும், மேலும் அவர் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பூபேந்திரசிங் ஜாலாவின் நிறுவனங்கள்


பூபேந்திரசிங் ஜாலா பின்வரும் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி:



  • BZ நிதி சேவைகள்

  • BZ வர்த்தகம்

  • BZ குழும நிறுவனங்கள்


அவரது நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை உறுதியான 7% வட்டியில் (எழுதப்பட்ட) நிலையான வைப்புத்தொகையிலும், 18% முதலீட்டில் திருப்பித் தருவதன் மூலம் நிதி நன்மைகளை வழங்குகின்றன மற்றும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் சில வங்கிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


ஆனால் இந்த மோசடியில் சுப்மன் கில் தொடர்பான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.