இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.


இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய அணி சிறப்பாக 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ஆனல் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சொதப்பலாக விளையாடினார்.


தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்:


அதன்படி, மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய அவர் 66 பந்துகள் களத்தில் நின்று வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.  அதற்கான காரணம் என்னவென்றால் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குறிப்பாக ஆரம்பத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் அதன்பின்னர், ஜெய்ஸ்வாலின் வருகையால் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வருகிறார்இதிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் சுப்மன் கில்.


அவர் விளையாடிய கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.  அதன்படி, கடைசி பத்து இன்னிங்ஸ்களில் 13, 18, 6, 10, 29*, 2, 26, 36, 10, and 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி  பல்வேறு வீரர்கள் அணியில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கும் சூழலில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சுப்மன் கில் வீணடித்து வருவது  இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது


 


மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் - ஜடேஜா... 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!


 


மேலும் படிக்க: Ind vs Eng 1st Test: விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன் தெரியுமா? ரோஹித் சர்மா விளக்கம்!