Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சுப்மன்கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இது அவருக்கு 7வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

Continues below advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி வருகிறது. 

Continues below advertisement

சதம் விளாசிய சுப்மன்கில்:

இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 1 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர், விராட் கோலி - சுப்மன்கில் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆடினார். விராட் கோலி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாச சுப்மன்கில் எந்தவித தடுமாற்றமும் இன்றி ஆடினார். 

அபாரமாக ஆடிய சுப்மன்கில் அரைசதம் விளாசினார். கில் அரைசதம் விளாசிய சில நிமிடங்களில் விராட் கோலியும் அரைசதம் விளாசினார். விராட் கோலி 52 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், எந்தவித தடுமாற்றமும் இன்றி அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து சுப்மன் கில் அடித்து அடினார். பந்துகளை பவுண்டரிககும், அவ்வப்போது சிக்ஸருக்கும் விளாசிய சுப்மன்கில் பந்துகளை விரயம் செய்யாமல் ஓரிரு ரன்களும் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். 

தொடர்ந்து அசத்தல் பேட்டிங்:

இந்த தொடரில் இந்திய அணி ஆடிய 3 போட்டிகளிலும் சுப்மன்கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துணைகேப்டன் சுப்மன்கில் முதல் ஒருநாள் போட்டியில் 87 ரன்களும், கடந்த ஒருநாள் போட்டியில் 60 ரன்களும் எடுத்தார். முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் தவறவிட்ட சதத்தை இந்த போட்டியில் அடித்து அசத்தினார். 

ரசிகர்கள் மகிழ்ச்சி:

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமான சுப்மன்கில் இதுவரை 50 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 அரைசதங்கள், 7 சதங்கள் மற்றும் 1 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். சமீபகாலமாக தொடர்ந்து அவுட் ஆஃப் பார்மில் தடுமாறி வந்த சுப்மன்கில் மிகவும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த தலைமுறையின் முக்கியமான வீரராகவும், இந்திய அணியின் எதிர்கால கேப்டனாகவும் சுப்மன்கில்லை இந்திய அணி தயார் செயது வரும் நிலையில் அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவது அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ்  டிராபி தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் ஃபார்முக்கு திரும்புவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola