சமீபத்திய ஆண்டுகளில் T20 கிரிக்கெட் பிரபலமடைந்து வருவதால், பல ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டதாகக் கருதுகின்றனர். இதில் முக்கியம் என்னவென்றால், இப்போது இருக்கும் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும், டெஸ்ட் போட்டிகளில் எப்படி சிவப்பு நிற பந்தை சமாளிப்பது என்ற சிந்தனையும் இல்லை. இருப்பினும், இன்னும் சிலபேட்ஸ்மேன்கள் உள்ளனர், அவர்கள் இந்த சவாலை புத்திசாலித்தனத்துடன் விளையாடி வருகின்றனர். 


இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவிடம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ஐந்து பேட்ஸ்மேன்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 






இதுகுறித்து அவர் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு : 



1. ஸ்டீவ் ஸ்மித் : 


ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் எனது பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 7000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக கடந்த  பேட்ஸ்மேன், ஸ்மித் தூய்மையான வடிவத்தில் ரன்-மெஷினுக்கு காணப்படுகிறார். அவர் பல முக்கிய போட்டிகளில் ரன்களை குவித்துள்ளார். எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக புத்திசாலித்தனமாக விளையாட கூடியவர் என்றார். 


2. ஜோ ரூட் : 


இங்கிலாந்தின் ஜோ ரூட் என்னை பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் இந்த ஆண்டு 6 டெஸ்ட் சதம் அடித்துள்ளது சாதாரணமான விஷயம் இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் அவர் தொடர்ந்து மூன்று சதங்கள், ரூட் இலங்கை மற்றும் இந்திய மண்ணில் இரட்டை சதங்களை அடித்தார். இந்த ரன் எண்ணிக்கை அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். 


3. கேன் வில்லியம்சன் : 


தற்போதுள்ள மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கேப்டனாக கேன் வில்லியம்சன் சிறப்பாக செய்லபட்டு வருகிறார். எல்லா விதமான நேரங்களிலும் பொறுமையாகவும், சிறப்பாக விளையாடி நெருக்கடியை சிறப்பாக எதிர்கொள்வார். இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெற்றிபெற செய்து அவரது கேப்டன்சியை வெளிப்படுத்தினார். 


4. மார்னஸ் லாபுஷாங்னே :


தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர் லாபுஷாங்னே. நீண்ட நேரம் கிரீஸில் இருந்து கொண்டு தாக்குதல் ஷாட்களை ஆடி வருகிறார். 19 டெஸ்டில் 2000 ரன்களை கடந்திருப்பதும் அவரது திறமையை வெளிக்காட்டுகிறது. 


5. விராட் கோலி : 


சமீபகாலமாக விராட் கோலி பெரிய அளவிலான ரன் எண்ணிக்கையை பெறாவிட்டாலும், தொடர்ந்து ரன் ஆவ்ரேஜை மெய்டன் செய்து வருகிறார். விரைவில் அவரது ஆட்டத்திறன் மேம்படுத்த அவர் முயற்சிக்க வேண்டும் என்றார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண