இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்த போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்திருக்கிறது.


ஓப்பனிங் களமிறங்கிய மயங்க், ரோஹித் இணை இந்திய அணி 50 ரன்களை எட்டும் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடியது. அதனை அடுத்து, ரோஹித் (29) ரன்களுக்கு ஆட்டமிழக்க, மயங்க் (33) ரன்களுக்கு வெளியேறினார்.  ஒன் டவுன் களமிறங்கிய விஹாரி சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். அவரோடு சேர்ந்து ரன் சேர்த்த கோலி, சதம் அல்லது அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்களுக்கு வெளியேறினார்.


டெஸ்ட் போட்டிகளில் 8000* ரன்கள்


இந்த போட்டியில் ரன் அடித்ததுமூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்கள் கடந்து அசத்தினார் கோலி. மேலும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2006ஆம் ஆண்டு தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்து அசத்தியிருந்தார். 


அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய  வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 






பண்ட் 96


தொடர்ந்து களமிறங்கிய பண்ட், அதிரடியாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். அவர் சதம் கடப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டபோது, லக்மல் பந்துவீச்சில் பவுல்டாகி அவுட்டானார். ஸ்ரேயாஸ் (27) ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா (45) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். பண்ட் மற்றும் ஜடேஜா இணை 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்ட் அவுட்டான பிறகு அஷ்வின் களமிறங்கி இருக்கிறார்.






இதனால், முதல் நாள் ஆட்டம்நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்திருக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண