ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52. அவரது திடீர் மரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.