ஆசிய கோப்பை 2023ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 ஆட்டத்தில் இன்றைய ஆட்டம் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, குழந்தைக்கு தனித்துவமான பரிசையும் வழங்கியபோது ஒரு அற்புதமான காட்சி மைதானத்தில் காணப்பட்டது.


பும்ராவுக்கு பரிசு வழங்கும் போது, ​​ஷாஹீன் கூறுகையில், "உங்கள் குழந்தை பிறந்ததற்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு என் மனதார வாழ்த்துக்கள். கடவுள் அவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும், அவரும் உங்களைப் போல் புகழ்பெற்றவராக வரவேண்டும். இதைத் தொடர்ந்து பும்ரா ஷஹீனுக்கும் நன்றி தெரிவித்தார். ஆசியக் கோப்பை 2023 இல் விளையாடுவதற்காக இலங்கை வந்த ஜஸ்பிரித் பும்ரா, தனது முதல் குழந்தையின் பிறப்புக்காக பாகிஸ்தானுக்கு எதிரான சுற்று போட்டிக்குப் பிறகு இந்தியா திரும்பினார். இதற்குப் பிறகு, செப்டம்பர் 4 ஆம் தேதி, அவர் தந்தையானார். பிறகு, தனது மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்று பெயரிட்டார். இந்த பெயரும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 






இதன் பிறகு, குழந்தையை பார்த்த மகிழ்ச்சியோடு ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் சூப்பர்-4 போட்டிகளில் விளையாட இந்திய அணியில் மீண்டும் இணைந்தார். கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றார். மழை காரணமாக நடைபெற்ற இப்போட்டி ரிசர்வ் நாளான இன்று நடைபெறும்.


ஜஸ்பிரித் பும்ராவின் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ்: 


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டு போட்டிக்கு திரும்புகினார். இதன்மூலம், ஒருநாள் போட்டியில் இவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் குரூப் ஆட்டம் மழையால் ரத்தானதால் பும்ராவுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் பிறகு நேபாளத்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. இப்போது சூப்பர்-4ல் பும்ராவின் பந்துவீச்சு மற்றும் உடற்தகுதி மீது மீண்டும் அனைவரின் பார்வையும் உள்ளது. இருப்பினும், கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியபோது பும்ரா தனது பந்துவீச்சினால் அனைவரது மனதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.