தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் மீண்டும் களமிறங்க உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் போது ஒரு பெரிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுகு வலி காரணமாக அவர் 2 -வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
கேப் டவுன் டெஸ்ட் ஆட்டம் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது. விராட் கோலியின் மீஈண்டும் இன்று களமிறங்க இருப்பதால் இந்திய அணி உற்சாகமாக உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி முதுகு வலி காரணமாக 2வது டெஸ்ட் போட்டியை இழக்க நேரிட்டது. இந்நிலையில் இன்று விராட் கோலி கேப் டவுனில் தனது 99வது டெஸ்ட் ஆட்டத்தை விளையாட உள்ளார்.
கோலி 3வது டெஸ்டில் ஒரு பெரிய பேட்டிங் சாதனையை படைக்க உள்ளார். டெஸ்டில் 7854 ரன்களுடன், கோலி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 32 வது இடத்தில் உள்ளார். கோலி நவம்பர் 2019 முதல் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. ஆனால் இந்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என நம்பப்படுகிறது.
கோலி அபாரமாக விளையாடி 2 இன்னிங்ஸ்களில் 146 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த 31வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார். அவரது ஆவரேஜ் சராசரியாக 50.34, 27 சதங்கள் மற்றும் 27 அரை சதங்கள் அடித்துள்ளார்.
8000 ரன்களைக் கடப்பது கோலிக்கு கடினமான பணியாக இருக்கும். ஆனாலும் கோலி சாதனை படைப்பார் என நம்புகிறோம். டெஸ்டில் 8000 ரன்களை கடந்தால், கோலி 6 -வது இந்திய பேட்ஸ்மேன் ஆவார். இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் (15921), ராகுல் டிராவிட் (13265), சுனில் கவாஸ்கர் (10122), விவிஎஸ் லக்ஷ்மண் (8781), வீரேந்திர சேவாக் (8503) ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆகும்.
டெஸ்ட் தொடரை கோலி ஒரு சதத்துடன் அடித்தால், அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆலன் பார்டர் மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோரை விட கோலி முன்னேறிவிடுவார். ஸ்டீவ் ஸ்மித் 27 சதங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் 51 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஜோஹன்ஸ்பர்கில் காயம் காரணமாக களமிறங்காத விராட் கோலி, மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளார். இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாகவே சென்ற போட்டியில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தாலும், பேட்ஸ்மேன்கள் ரன் எடுத்தால் தான், வெற்றி பெற முடியும். இதனால் பேட்டிங்கை வலுப்படுத்த இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வேண்டும்.