வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகள் தவிர, இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடுகிறது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 


டெஸ்ட் அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புஜாரா, உமேஷ் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் கழட்டி விடப்பட்டனர். மேலும், அஜிங்க்யா ரஹானே மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், டெஸ்ட் அணியின் இடம் பிடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2023 ரஞ்சி டிராபியில் சர்பராஸ் கான் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். அவர் 9 இன்னிங்ஸில் 3 சதம் உள்பட 556 ரன்களுடன் 92.66 சராசரியுடன் விளையாடியுள்ளார்.






இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இந்திய அணியில் சர்பராஸ் கான் இடம் பெறவில்லை. இந்த தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, சர்பராஸ் கான் இடம் பெறுவார் என அதிகளவில் நம்பப்பட்டது. ஆனால், அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம்பெறாததை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 






பல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு: 


இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். 


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல் , குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார்.


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், மோ. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் நவ்தீப் சைனி