இரானி கோப்பை:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. இதனிடையே மறுபுறம் உள் நாட்டு தொடர்களின் ஒன்றான இரானி கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வரலாற்று சாதனையை படைத்தார் சர்ஃபராஸ் கான். அபாரமாக விளையாடிய அவர் மொத்தம் 222 ரன்களை குவித்தார். இந்தத் தொடரில் வசீம் ஜாஃபர் அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 286 ரன்கள் அடித்ததே சாதனையாகும்.
இது தான் காரணம்:
அதன் பிறகு முரளி விஜய் 266 ரன்கள், பிரவீன் ஆம்ரே 246 ரன்களும், சுரேந்தர் அமர்நாத் 235 ரன்களும், ரவி சாஸ்திரி 217 ரன்களும், ஜெய்ஸ்வால் 213 ரன்களும் அடித்திருந்த நிலையில் தற்போது சர்பராஸ்கான் ஜெய்ஸ்வால் ரவி சாஸ்திரி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் தான் இரட்டைச் சதம் அடித்ததற்கான காரணம் என்னவென்று சர்ஃபராஸ் கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "என் தம்பி இந்த தொடரில் விளையாடி இருந்தால் எனது அப்பா மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாகவே நான் இந்த போட்டியில் விளையாடினேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இருந்தது. ஏனெனில் இந்த போட்டிக்கு முன்னதாக என்னுடைய தம்பி விபத்துக்குள்ளானார்.
நான் இந்த போட்டியில் களமிறங்கும் முன்னரே நான் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் இரட்டை சதம் அடிப்பேன் என்று எனது குடும்பத்தாரிடமும், எனது சக அணி வீரர்களும் உறுதி அளித்திருந்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் எனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி"என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Mohammed Shami:ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள்? காட்டமான முகமது ஷமி
மேலும் படிக்க: Hardik Pandya:பயிற்சியில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து - அதிருப்தி அடைந்த மோர்கல்! என்ன நடக்கும்?