SA Vs NED Score LIVE: பலமான தென்னாப்பிரிக்காவை பந்தாடிய நெதர்லாந்து; 38 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி

SA Vs NED Score LIVE: தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

Continues below advertisement

LIVE

Background

SA Vs NED World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  15வது லீக் போட்டியில், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் தென்னாப்ரிக்காவும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் நெதர்லாந்து அணியும் களமிறங்க உள்ளது.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 14 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

தென்னாப்ரிக்கா - நெதர்லாந்து மோதல்:

பஞ்சாப் மாநிலம்  தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 2 லீக் போட்டிகளிலும் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நெதர்லாந்து அணிதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற தென்னாப்ரிக்க அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க நெதர்லாந்து அணியும் இன்றைய போட்டியில் மல்லுக்கட்டுகின்றன.

பலம் & பலவீனங்கள்:

தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் சதம் விளாசியுள்ளார். மறுமுனையில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, வலுவான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங் அவர்களது பலமாக இருக்க பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நேருக்கு நேர்:’

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளுக் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்க அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

மைதானம் எப்படி?

தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.

உத்தேச அணி விவரங்கள்:

தென்னப்ரிக்கா:

குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி

நெதர்லாந்து:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்

Continues below advertisement
23:16 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா

இந்த தோல்வியினால் தென்னாப்பிரிக்காவிற்கு புள்ளிப்பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்றாலும், ரன்ரேட்டில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது. 

23:14 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கிய தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மொத்தம் 31 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியுள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் 8 ரன்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கப்பட்டுள்ளது. 

23:11 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தென்னாப்ரிக்கா தோல்வி

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இந்த தோல்வி ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது. இந்த தோல்வி பலமான தென்னாப்பிரிக்கா அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதைத் தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

23:10 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளிய நெதர்லாந்து

இந்த வெற்றி மூலம் நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

23:08 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் வெற்றி

இந்த வெற்றி இந்த தொடரில் நெதர்லாந்து அணியின் முதல் வெற்றியாக பதிவாகியுள்ளது.

23:03 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: நெதர்லாந்து வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

22:56 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 200 ரன்களை நெருங்கிய தென்னாப்பிரிக்கா

41.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டினை இழந்து 194 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:55 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: வெற்றியை உறுதி செய்த நெதர்லாந்து..!

தென்னாப்பிரிக்கா அணி 41 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டினை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நெதர்லாந்து அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது எனக் கூறலாம். 

22:49 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 40 ஓவர்கள் முடிவில்.. கட்டுக்கோப்பான பந்து வீச்சு.. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை

40 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக பந்து வீசி வரும் நெதர்லாந்து அணி ரன்கள் கொடுக்கவில்லை என்றாலும் கடைசி விக்கெட்டினை வீழ்த்த போராடி வருகின்றது. 

22:45 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இன்னும் 4 ஓவர்கள்தான்..!

போட்டி 39 ஓவர்களை நிறைவு செய்துள்ளதால், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி இலக்கினை எட்ட இன்னும் 4 ஓவர்கள் மீதமுள்ளது. அதில் 64 ரன்கள் சேர்க்க வேண்டும். 

22:41 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 38 ஓவர்கள் முடிந்தது..!

38 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:38 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க போராடும் பார்ட்னர்ஷிப்

தென்னாப்பிரிக்கா அணியின் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ள மகாராஜ் மற்றும் நிகிடி பார்ட்னர்ஷிப் அணியின் தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க போராடி வருகின்றனர். இருவரும் இணைந்து 15 பந்தில் 14 ரன்கள் சேர்த்துள்ளனர். 

22:25 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 9வது விக்கெட்டினை இழந்தது தென்னாப்பிரிக்கா

போட்டியின் 35.1வது ஓவரில் ரபாடா தனது விக்கெட்டினை லீதியிடம் இழந்து வெளியேறினார். 

22:24 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 35 ஓவர்கள் முடிந்தது..!

35 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணி வெற்றி பெற இன்னும் 80 ரன்கள் தேவை. 

22:17 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 150 ரன்களை எட்டிய தென்னாப்பிரிக்கா

33.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணி வெற்றி பெற இன்னும் 94 ரன்கள் தேவை. 

22:15 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 8வது விக்கெட்டும் காலி..!

தென்னாப்பிரிக்காவின் கோட்ஸீ 23 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் லீதி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

22:06 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: கில்லர் மில்லர் அவுட்..!

நெதர்லாந்து அணிக்கு மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த அதிரடி ஆட்டக்காரர் மில்லர் வான் பீக் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

22:05 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 30 ஓவர்கள் முடிந்தது.. நெதர்லாந்து அணியின் ஆதிக்கம்...

30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:01 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 107 ரன்கள் தேவை..!

தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் 14 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. இந்த அணிக்கு உள்ள ஒரே நம்பிக்கை மில்லர் மட்டும்தான். 

21:52 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 125 ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்கா..

தென்னாப்பிரிக்கா அணி 28 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 129 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

21:49 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: மிரட்டும் கோட்ஸீ..!

8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கோட்ஸீ 27வது ஓவரில் பவுண்டரி சிக்ஸர் என பறக்கவிட்டு மிரட்டி வருகின்றார். 

21:40 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா

25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.

21:39 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 6வது விக்கெட்டினை இழந்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜான்சென் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் முறையில் மீக்கரீனிடம் இழந்து வெளியேறினார். 

21:34 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும்..

தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் 19 ஓவர்களில் 139 ரன்கள் தேவை. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள்தான் உள்ளது. 24 ஓவர்களில் 107 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:31 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: ஒற்றை நம்பிக்கை மில்லர்

தென்னாப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மில்லர் மீது அணியை வெற்றி பெறவைக்க பெரும் பங்கினைச் செய்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டாப் ஆர்டரகள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி தற்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 

21:29 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 100 ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்கா

22.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:28 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 99 ரன்களில் தென்னாப்பிரிக்கா

22 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எட்டியுள்ளது. 

21:25 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 100 ரன்களை நெருங்கும் தென்னாப்பிரிக்கா

21 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் நம்பிக்கை அளிக்கும் விதமாக மில்லர் மட்டும் உள்ளார். 

21:20 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 90-களில் தென்னாப்பிரிக்கா..!

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:17 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது..!

19 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:16 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 5 வது விக்கெட்டினை கைப்பற்றியது நெதர்லாந்து..!

போட்டியின் 18.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் க்ளாசென் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 28 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் வன் பீக் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

21:11 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 18 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா

18 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:05 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 75 ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்கா

17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:01 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:29 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்தது தென்னாப்பிரிக்கா

10வது ஓவரின் முதலாவது பந்தில் பவுமா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

20:26 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: பவர்ப்ளே முடிவில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி முதல் 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:21 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி; டி காக் அவுட்..!

இந்த தொடரின் தனது முதல் இரண்டு போட்டிகளில் சதம் விளாசிய டி காக், இந்த போட்டியில் 22 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

20:13 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் சிக்ஸர்..!

போட்டியின் முதல் சிக்ஸரை தென்னாப்ரிக்கா அணியின் பவுமா விளாசியுள்ளார்.

20:12 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் ஐந்து ஓவரில் தென்னாப்ரிக்கா

5 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:00 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: ரன் கணக்கை துவங்கிய தென்னாப்பிரிக்கா..!

தென்னாப்பிரிக்கா அணி தனது ரன் கணக்கை போட்டியின் இரண்டாவது ஓவரில்தான் துவங்கியது. இரண்டு ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:56 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் ஓவரே மெய்டன்..!

முதல் ஓவரினை வீசிய நெதர்லாந்து அணியின் டட் ரன் ஏதும் கொடுக்காமல் ஓவரை மெய்டனாக வீசியுள்ளார். 

19:50 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: களமிறங்கியது தென்னாப்ரிக்கா..!

246 ரன்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து அணியை எதிர்த்து தென்னாப்ரிக்கா அணி களமிறங்கியுள்ளது. 

19:32 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரபாடா..!

தென்னாப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி தென்னாப்ரிக்கா அணிக்காக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளார். 

19:30 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஸ்காட் எட்வர்ட்ஸ்

நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எர்வர்ட்ஸ் 69 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி  78 ரன்கள் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவர முக்கிய பங்காற்றியுள்ளார். 

19:24 PM (IST)  •  17 Oct 2023

இறுதியில் அதிரடி.. துவம்சமான தென் ஆப்ரிக்கா பந்து வீச்சு; 245 ரன்கள் குவித்த நெதர்லாந்து

நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 254 ரன்கள் சேர்த்தது. 

19:04 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 200 ரன்களை எட்டியது நெதர்லாந்து..!

39.2 ஓவர்களில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

19:01 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 200 ரன்களை நெருங்கும் நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 192 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:00 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: அரைசதம் விளாசிய கேப்டன் எட்வர்ட்ஸ்..!

நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 53 பந்துகளில் அரைசதம் விளாசி கேப்டன் இன்னிங்ஸ் ஆடி வருகிறார். 

18:55 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 175 ரன்களை எட்டிய நெதர்லாந்து அணி..!

37.2 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:44 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 150 ரன்களைக் கடந்த நெதர்லாந்து அணி..!

35 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டினை இழந்து 156 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:37 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 7வது விக்கெட்டினை இழந்தது நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணியின் வன் பீக் தனது விக்கெட்டினை ஸ்டெம்பிங் முறையில் இழந்து வெளியேறினார். 34 ஒவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:25 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 30 ஓவர்கள் முடிவில்..!

30 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:16 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 6வது விக்கெட்டினை இழந்த நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் தனது 6வது விக்கெட்டினை இழந்து 113 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:05 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: நெதர்லாந்தின் தற்போதைய ரன்ரேட்

26 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது இந்த அணியின் ரன்ரேட் 4.05 ஆக உள்ளது. 

18:03 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 100 ரன்களைக் கடந்த நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:03 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 24 ஓவர்கள் முடிந்தது.

24 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு நெதர்லாந்து அணி 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

17:35 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: மீளுமா நெதர்லாந்து.. 20 ஓவர்கள் முடிந்தது...

20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளதால், இந்த அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல நல்ல பார்ட்னர்ஷிப் தேவை. களத்தில் நிடமுனரு மற்றும் எங்கல்ப்ரெக்ட் உள்ளனர், 

17:27 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது..!

18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:21 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 60 ரன்களை எட்டிய நெதர்லாந்து..!

4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நெதர்லாந்து அணி 17வது ஓவரில் 60 ரன்களை எட்டியுள்ளது. 

17:18 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: போட்டியின் முதல் சிக்ஸர்..!

போட்டியின் முதல் சிக்ஸரை நெதர்லாந்து அணியின் எங்கல்ப்ரெக்ட் போட்டியின் 16வது ஓவரில் விளாசியுள்ளார். 

17:16 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: பார்ட்னர்ஷிப்க்காக காத்திருக்கும் நெதர்லாந்து அணி..!

நெதர்லாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெளியேறியுள்ளதால், அந்த அணி மேற்கொண்டு ரன்கள் சேர்க்க ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பிற்காக காத்திருக்கின்றது. 

17:15 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: அக்ரீமன் அவுட்..!

நெதர்லாந்து அணியின் கேப்டன் அக்ரீமன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் தனது விக்கெட்டினை 15.1 ஓவர்கள் முடிவில் வெளியேறினார். இவர் 25 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். 

17:13 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: மீண்டும் மெய்டன் ஓவர்..!

போட்டியின் 15வது ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரை மெய்டனாக வீசியுள்ளார். இந்த ஓவர் இந்த போட்டியின் இரண்டாவது மெய்டன் ஓவர் ஆகும். 

17:10 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: நெதர்லாந்து அணியின் தற்போதைய ரன்ரேட்..!

14 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாண்டு அணியின் தற்போதைய ரன்ரேட் 3.55ஆக உள்ளது. 

17:06 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 50 ரன்களை எட்டிய நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி 13.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:04 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 50 ரன்களை நெருங்கும் நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:02 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இரண்டு வைய்டு மட்டும் இல்லையென்றால்..

போட்டியின் 12வது ஓவரை வீசிய கோட்ஸி முதலில் இரண்டு வைய்டுகள் வீசினார். ஆனால் அடுத்த 6 பந்துகள் டாட் பந்துகளாக வீசினார். இதனால் இந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகள் மட்டும் வைய்டு இல்லை என்றால் இந்த ஓவர் மெய்டனாக வீசப்பட்ட ஓவர்களில் ஒன்றாக மாறியிருக்கும். 

16:56 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: அடுத்தடுத்து வைய்டு..!

போட்டியின் 12வது ஓவரினை வீசிவரும் கொய்டீசி தனது முதல் இரண்டு பந்துகளை வைய்டாக வீசினார். 

16:54 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்தது நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி தனது மூன்றாவது விக்கெட்டினை இழந்துள்ளது. போட்டியின் 10.4வது ஓவரில் லீதி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

16:52 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இதுவரை ஆட்டம்..!

இதுவரை மொத்தம் 10 ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 32 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளது. இதில் 5 ரன்கள் எஸ்ட்ராஸ் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

16:48 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: பவர்ப்ளே முடிவில் நெதர்லாந்து..!

நெதர்லாந்து அணி பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 32 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் அக்கர்மான் 5 ரன்களுடனும் லீதி 2 ரன்களுடனும் உள்ளனர். 

16:40 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது..

8 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளார். 

16:36 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா அணியின் ஜான்சன் வீசிய 8வது ஓவரின் முதல் பந்தில் நெதர்லாந்து அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 25 பந்தில் 18 ரன்கள் சேர்த்திருந்தார். 

16:33 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா அணி 7 ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியுள்ளது. 

16:30 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: விக்ரம்ஜித் சிங் காலி..!

தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நெதர்லாந்து அணியின் விக்ரம்ஜித் சிங் ரபடா பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 16 பந்தில் 2 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:24 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: அமர்களப்படுத்தும் முதல் ஐந்து ஓவர்கள்..!

முதல் ஓவரில் ரன்கள் ஏதும் சேர்க்காமல் இருந்த நெதர்லாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:16 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் மூன்று ஓவர்களில் நெதர்லாந்து..!

மூன்று ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:11 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிவில்..!

இரண்டு ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளார். 

16:07 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: ஆரம்பமே எக்ஸ்ட்ராஸ்..!

போட்டியின் இரண்டாவது ஓவரினை வீசும் ஜான்சென் முதல் பந்தில் மட்டும் மொத்தம் இரண்டு வைய்டு வீசியுள்ளார். 

16:05 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: முதல் ஓவர் மெய்டன்..!

போட்டியின் முதல் ஓவரினை வீசிய நிகிடி, அதனை மெய்டன் ஓவராக வீசியுள்ளார். அதாவது ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீசியுள்ளார். முதல் ஓவரை விக்ரம்ஜித் சிங் எதிர்கொண்டார். 

16:02 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தென் ஆப்ரிக்காவின் முதல் ஓவர்..!

தென் ஆப்ரிக்காவின் பவுலிங் இன்னிங்ஸை வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி வீசி வருகிறார். 

16:01 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: நெதர்லாந்தின் தொடக்க ஜோடி..!

நெதர்லாந்து அணியின் இன்னிங்ஸை விக்ரம் சிங் மற்றும் மேக்ஸ் ஓடவ்ட் தொடங்கியுள்ளனர். 

15:59 PM (IST)  •  17 Oct 2023

43 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி; தொடங்கியது போட்டி; களமிறங்கியது நெதர்லாந்து

மழை காரணமாக போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டி 50 ஓவரில் இருந்து 43 ஓவர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

15:19 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Updates: நின்றது மழை..!

தர்மசாலாவில் தற்போது மழை நின்றுவிட்டதால், வானம் மேகங்கள் இன்றி காணப்படுகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டி மிக விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

15:14 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Updates: மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்படுமா?

மழை நின்றால்  போட்டியின் ஓவர் குறைக்கபடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதாவது ஏற்கனவே டாஸ் மழை காரணமாக தாமதமாக போடப்பட்டதால், மழை நின்ற பின்னர் நடுவர்கள் போட்டியின் ஓவர் குறைக்கப்படுவது குறித்து முடிவு செய்வார்கள். 

15:09 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Updates: பலமாக வீசும் காற்று..!

தர்மசாலாவில் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால், போட்டியைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

15:05 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: வெளுத்து வாங்கும் மழை..!

தர்மசாலாவில் லேசாக பெய்து வந்த மழை தற்போது கனமாக பெய்து வருவதால் போட்டி தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்பார்க்கலாம். 

14:55 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: விளையாடும் மழை..!

தர்மசாலாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆடுகளம் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மழையில் நனைந்தவாறு போட்டிக்காக காத்துக்கொண்டு உள்ளனர். 

14:51 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்லும் பட்சத்தில்..!

இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெல்லும் பட்சத்தில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். 

14:45 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: தென் ஆப்ரிக்காவின் ப்ளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன்: குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, ஜெரால்ட் கோட்ஸி

14:44 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: நெதர்லாந்து அணியின் ப்ளேயிங் லெவன்..!

நெதர்லாந்து பிளேயிங் லெவன்: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், பால் வான் மீகெரென் 

14:39 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Score: டாஸ் வென்றது தென் ஆப்ரிக்கா..!

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது அணி முதலில் பந்து வீசும் என தெரிவித்துள்ளார். 

14:11 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Updates: விட்டு விட்டு பெய்யும் மழை..

தர்மசாலாவில் மழை விட்டு விட்டு பெய்வதால் மைதானத்தின் வெளிப்புறத்தில் அதிகப்படியான மழைநீர் தேங்கியுள்ளது. 

14:07 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED LIVE Updates: தொடரும் மழை.. டாஸ் போடுவதில் தாமதம்..

தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்த திட்டமிடப்பட்ட தர்மசாலாவில் மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

13:55 PM (IST)  •  17 Oct 2023

SA Vs NED Score LIVE: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து போட்டி.. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!

தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.