SA vs BAN Score LIVE: ஒன்மேன் ஆர்மியாக போராடிய மஹமுதுல்லா அறுதல் சதம்; 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இமாலய வெற்றி
SA vs BAN Score LIVE: தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடக்க வீரராக களமிறங்கி 140 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் குவித்த டி காக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் வங்கதேச தரப்பில் மொத்தம் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. அதில் 4 சிக்ஸர்கள் மஹமுதுல்லா பறக்கவிட்டார்.
வங்கதேச அணி தரப்பில் மொத்தம் 25 பவுண்டரிகள் விரட்டப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மஹமுதுல்லா மட்டும் 11 பவுண்டரிகள் விரட்டியுள்ளார்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தரப்பில் மொத்தம் 19 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் கென்ரிச் கிளாசன் 8 சிக்ஸர்கள் விரட்டி மிரட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மொத்தம் 26 பவுண்டரிகள் விளாசியுள்ளது. அதிகபட்சமாக டி காக் 15 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
வங்கதேச அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
சிறப்பாக விளையாடி 111 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்த மஹமுதுல்லா தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 11 பவுண்டரி 4 சிக்ஸர் பறக்கவிட்டுள்ளார்.
45 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 223 ரன்கள் சேர்த்துள்ளது. மஹமுதுல்லா மட்டும் 107 ரன்களுடன் களத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றார்.
இந்த சதத்துடன் உலகக் கோப்பையில் தனது மூன்றாவது சதத்தையும் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தையும் மஹமுதுல்லா விளாசியுள்ளார்.
வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மஹமுதுல்லா 104 பந்தில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி தனது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
44 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது. மஹமுதுல்லா 96 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
43 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது.
42 ஓவர்களில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
41.2 ஓவர்களில் வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
41 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக மஹமதுல்லா 81 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 300 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. 300வது சிக்ஸர் தென்னாப்பிரிக்கா வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது வங்கதேச வீரர் மகமதுல்லா பறக்கவிட்டார்.
40 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் 10 ஓவர்களில் தேவை.
வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 200 ரன்கள் 65 பந்துகளில் தேவைப்படுகின்றது. அதாவது ஓவருக்கு கிட்டத்தட்ட 19 ரன்கள் தேவைப்படுகின்றது.
39 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வங்கதேச அணி தரப்பில் மகமுதுல்லா 69 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
38 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டினை இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளது. 2 விக்கெட் கைப்பற்றினால் தென்னாப்பிரிக்கா தனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக்கும்.
வங்க தேச அணிக்கு 78 பந்துகளில் 224 ரன்கள் வெற்றிக்கு தேவைப் படுகின்றது.
போட்டியின் 37வது ஓவரினை வீசிய ரபாடா பந்தில் ஹசன் முமகது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் மூலம் வங்கதேசம் தனது 8வது விக்கெட்டினை இழந்துள்ளது.
35.4 ஓவர்களில் வங்காள தேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து மந்தமாக விளையாடி வருகின்றது.
35 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டினை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் நெருக்கடியான சூழலில் களமிறங்கி அணியின் தோல்வி வித்தியாசத்தினை குறைக்க போராடி வரும் முகமதுல்லா தனது அரைசதத்தினை 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி பூர்த்தி செய்துள்ளார்.
34 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டினை இழந்து 143 ரன்கள் சேர்த்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டினை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.
வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமதுல்லா 56 பந்தில் 46 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கி வருகின்றார்.
30வது ஓவரில் மஹாராஜ் வீசிய பந்தினை எதிர்கொண்ட ஹசன் முகமது பந்தை பேட்டில் எதிர்கொள்ளத் தவறியதால் தென்னாப்பிரிக்கா மூன்றாவது நடுவரை நாடியது. ஆனால் பந்து அவுட் சைடு லெக் சைடில் பிட்ச் ஆனாதால் அவுட் கொடுக்கப்படவில்லை.
29.5 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டினை இழந்து 123 ரன்கள் சேர்த்து தோல்வியின் விழும்பில் உள்ளது.
வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 221 ரன்கள் தேவைப்படுகின்றது.
போட்டியின் 29வது ஓவரில் வங்கதேச அணி தனது 7வது விக்கெட்டினை இழந்துள்ளது. முகமதுல்லாவுக்கு ஓரளவுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து வந்த நசீம் தனது விக்கெட்டினை 19 பந்தில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
27 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டினை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கத்தின் வெற்றிக்கு 280 ரன்கள் 23 ஓவர்களில் தேவைப்படுகின்றது.
26.3 ஓவர்களில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
23 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள வங்கதேச அணி 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளது.
போட்டியின் 22வது ஓவரில் வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் தனது விக்கெட்டினை 11 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
21 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 5 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்து போராடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது.
ஏற்கனவே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்த வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 44 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டினை இழந்து 58 ரன்கள் சேர்த்து மிகவும் மந்தமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்து மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்தஃபிகுர் ரஹிம் தனது விக்கெட்டினை 17 பந்தில் 8 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
வங்கதேச அணியின் லிட்டன் தாஸ்க்கு காலில் பந்து பட்டு காயம் ஏற்படவே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டினை இழந்து 32 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.
போட்டியின் 8வது ஓவரின் 2வது பந்தில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனது விக்கெட்டினை லீஸாட் வில்லியம்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார்.
7வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டினை இழந்தது வங்கதேசம். 7 ஓவர்கள் முடிவில் அந்த அணி 31 ரன்கள் சேர்த்தது.
7வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் விக்கெட் வீழ்த்திய யான்சென் மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பினை தவறவிட்டார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷாண்டோ தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
வங்கதேச அணியின் தன்சித் தனது விக்கெட்டினை யான்சென் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 17 பந்தில் 12 ரன்கள் சேர்த்திருந்தார்.
வங்காள தேச அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
முதல் 5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது, வங்கதேசத்துக்கு ஓவருக்கு 8.02 ரன்ரேட் அளவில் தேவைப்படுகின்றது.
3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது.
383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்கியுள்ளது. வங்கதேச அணியின் இன்னிங்ஸை லிட்டன் தாஸ் மற்றும் தான்சித் ஹசன் நிதானமாக தொடங்கியுள்ளனர்.
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.
மின்னல் வேகத்தில் சிக்ஸர்கள் விளாசி வந்த க்ளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
49 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் சேர்த்துள்ளனர்.
க்ளாசன் மற்றும் மில்லர் கூட்டணி 20 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்துள்ளனர்.
48.1 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 48 ஓவர்களில் 349 ரன்கள் சேர்த்துள்ளது.
5வது வீரராக களமிறங்கியது முதல் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி வரும் ஹென்றிச் க்ளாசன் இதுவரை 6 சிக்ஸர்கள் 2 பவுண்டரி விளாசியுள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி 140 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரி 7 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
45 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 309 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்களுக்குப் பின்னர் அதிரடியாக விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 44 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 300 ரன்கள் சேர்த்துள்ளது.
34 பந்துகளில் 4 சிக்ஸர் ஒரு பவுணடரியுடன் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார் ஹென்றிச் க்ளாசன்.
43 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 283 ரன்கள் சேர்த்துள்ளது.
129 பந்துகளை எதிர்கொண்டு தனது 150 ரன்களை நிறைவு செய்துள்ளார் டி காக்.
டி காக் மற்றும் க்ளாசன் கூட்டணி 74 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் தென்னாப்பிரிக்கா அணி 42 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 261 ரன்கள் குவித்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 6.21ஆக உள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை 356 ரன்கள் குவித்து தனதாக்கியுள்ளார் டி காக். விராட் கோலியின் சாதனையை முறியடித்த இவர் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
40 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 238 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் ஹென்றிச் க்ளாசன் இதுவரை மூன்று சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
38 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 217 ரன்கள் சேர்த்துள்ளனர்.
கை கோர்த்தது முதல் சிறப்பாக விளையாடி வரும் ஹென்றிச் க்ளாசன் மற்றும் டி காக் கூட்டணி 45 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளனர்.
37 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் குவித்து வருகின்றது.
36 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 203 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
35 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. குறிப்பாக டி காக் 101 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றார்.
101 பந்துகளை எதிர்கொண்ட டி காக் சதம் விளாசியுள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்த சதம் இவரின் மூன்றாவது சதம் விளாசியுள்ளார். ஒருநாள் தொடரில் டி காக்கின் 20வது சதமாக பதிவாகியுள்ளது.
34 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்துள்ளது. டி காக் 99 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
32.1 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 175 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
32 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் தொடக்க வீரர் டிகாக் 95 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
137 பந்தில் 131 ரன்கள் குவித்த டி காக் மற்றும் மார்க்ரம் கூட்டணி போட்டியின் 31வது ஓவரில் பிரிந்தது. 31 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 169 ரன்கள் சேர்த்துள்ளது.
வங்காள தேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசனிடம் தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 69 பந்தில் 60 ரன்கள் சேர்த்திருந்தார்.
30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் ரன்ரேட் 5. 41ஆக உள்ளது.
28.1 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 152 ரன்கள் குவித்தது மட்டும் இல்லாமல் வலுவான நிலையில் உள்ளது.
28 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
27 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 143 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
நெருக்கடியான நிலையில் அணி இருந்தபோது களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 58 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் விளாசி தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
26 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
டிகாக் மற்றும் மார்க்ரம் கூட்டணி 108 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து தென்னாப்பிரிக்கா அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர்.
25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
24 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 126 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 24வது ஓவரின் கடைசி பந்தினை வீசும்போதுதான் இந்த போட்டியின் முதல் வைய்டு வீசப்பட்டுள்ளது. இதனை முகமதுல்லா வீசினார்.
23 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் ரன்ரேட் 5.04ஆக உள்ளது.
22 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 113 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 22வது ஓவரில் டிகாக் மிகச் சிறப்பாக தேட் மேன் திசையில் சிக்ஸர் விளாசியுள்ளார்.
20.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்கா தரப்பில் இதுவரை 8 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது.
20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 99 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.95ஆக உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 19 ஓவர்கள் பேட்டிங் செய்து 2 விக்கெட்டினை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் பந்து வீசியுள்ள வங்காள தேச அணி இதுவரை ஒரு வைய்டு கூட வீசவில்லை. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு லெக்-பைஸில் மட்டும் ஒரு ரன் எக்ஸ்ட்ரா கணக்கில் கிடைத்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
டி காக் மற்றும் மார்க்ரம் கூட்டணி 59 பந்தில் 55 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
47 பந்துகளை எதிர்கொண்ட டி காக் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் இவர் ஏற்கனவே இரண்டு சதம் விளாசியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் இதுவரை 45 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் சேர்த்துள்ளார்.
குயிண்டன் டி காக் இதுவரை 3 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தென்னாப்பிரிக்கா தரப்பில் இதுவரை சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேனும் இவர்தான்.
போட்டியின் 16வது ஓவரை வீசிவரும் வங்காளம் அணி இதுவரை 5 பந்து வீச்சாளரை பயன்படுத்தியுள்ளது.
வங்காள தேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 15வது ஓவரை வீசிவரும் ஷ்கிப் அல்ஹசனின் முதல் பந்தினை டி காக் சிக்ஸருக்கு விரட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விட்டதால் தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி வருகின்றது. 13 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் சேர்த்துள்ளது.
11.4 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீண்டு வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் முதல் 10 ஓவர்களில் 4 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசப்பட்டுள்ளது.
பவர்ப்ளேவில் தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் அந்த அணியின் ரன்ரேட் 4.4ஆக உள்ளது.
பவர்ப்ளே முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 44 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. பவர்ப்ளே முடிய இன்னும் ஒரு ஓவர் மட்டுமே உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் 4வது வீரராக களமிறங்கியுள்ளார். இவர் டி காக்குடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வென் டர் டுசன் தனது விக்கெட்டினை மெஹிதி ஹசன் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இவர் 7 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்தார்.
7 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் விக்கெட்டினை இழந்ததையடுத்து, மூன்றாவது வீரராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டர் டுசன் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 7வது ஓவரினை வீசிய ஷொரிஃபுல் இஸ்லாம் தனது முதல் பந்தில் ரீஸா ஹென்றிக்ஸை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றியுள்ளார்.
இந்த போட்டியின் முதல் சிக்ஸரை குயிண்டன் டி காக் போட்டியின் 6வது ஓவரில் அடித்துள்ளார். இவர்தான் போட்டியின் முதல் பவுண்டரியையும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்து, நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பரும் தொடக்க பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக்கிற்கு இந்த போட்டி 150வது ஒருநாள் போட்டியாகும். இந்த உலகக் கோப்பைத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக குயிண்டன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹென்றிக்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த வங்கதேச வீரர் தவறவிட்டார்.
தென்னாப்பிரிக்கா அணி தனது பேட்டிங் இன்னிங்ஸை முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்து சிறப்பாக தொடங்கியுள்ளது. இதில் ஒரு பவுண்டரியும் அடங்கும்.
வங்காள தேச அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் இன்னிங்ஸை குயிண்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடங்கியுள்ளனர்.
13வது உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் போட்டிதான் வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியாகும். உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இங்கு நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வங்காளதேசமும் மோதிக்கொள்கின்றன. இதில், தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், வங்காளதேசம் அணி ஒரு வெற்றியுடன் 7வது இடத்திலும் உள்ளது.
குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் ( கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ்
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, நசும் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத்.
உடல்நலன் குறைபாடு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத தென்னாப்ரிக்கா கேப்டன் பவுமா, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்க்ரம் இன்றைய போட்டியிலும் கேப்டனாக செயல்படுகிறார்.
மும்பையில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
SA vs BAN Score LIVE: உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 23வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா:
வங்கதேச அணியை காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி பலமிகுந்த அணியாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும், கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 399 ரன்களை விளாசி தங்களது பேட்டிங் பலத்தை மீண்டும் நிரூபித்தனர்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டி காக், ஹென்ட்ரிக்ஸ், டுசென், கிளாசென், மில்லர், ஜான்சென் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பலமாக இருப்பதற்கு இவர்களே மிகவும் முக்கிய காரணமாக உள்ளனர்.
பேட்டிங், பவுலிங்:
டி காக் – ஹென்ட்ரிக்ஸ் சிறப்பான தொடக்கம் தந்தால் இறுதி கட்டத்தில் கிளாசென் – ஜான்சென் ஜோடி ஆட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மிடில் ஆர்டரில் மார்க்ரம், டு சென் சிறப்பாக ஆடினால் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் பலமாகும்.
வங்கதேச அணியில் முஸ்தபிஷூர் ரஹ்மான், இஸ்லாம், முகமது, தன்ஷிம், டஸ்கின் அகமது பந்துவீச்சில் பலமாக வீச வேண்டியது அவசியம் ஆகும். வங்கதேச அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனே ஆவார். அவர் இன்றைய போட்டியில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறி. அவருக்கு காயம் ஏற்பட்டுள்தால் உடல்தகுதியிருந்தால் மட்டுமே பங்கேற்பார்.
வெல்லப்போவது யார்?
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சின் பலமாக ரபாடா, கோட்ஸி, ஜான்சென், மகாராஜ் உள்ளனர். இவர்களது பந்துவீச்சை சமாளித்து வங்கதேச அணியின் ஷான்டோ, ரஹீம், தன்ஷித் ஹாசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன், தௌகித் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இரு அணிகளும் இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 18 ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், 6 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி 1 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 4 போட்டியில் ஆடி 1 வெற்றி 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்க அணி தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: Bishan Singh Bedi: பிஷன்சிங் பேடி அப்பவே அப்படி! பாகிஸ்தானுக்கு எதிராக செய்த சம்பவம் - மறக்க முடியுமா?
மேலும் படிக்க: AFG Vs PAK, Match Highlights: மட்டமான ஃபீல்டிங்; சுமாரான பவுலிங்; ஆஃப்கானிஸ்தானுக்கு வெற்றியை தூக்கி கொடுத்த பாகிஸ்தான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -