Ranji Trophy: கம்பேக் வருமா? 10 ஆண்டுகளுக்குப் பின், ரஞ்சி போட்டியில் ரோகித் சர்மா..! இவ்வளவு சம்பவங்கள் இருக்கா?

Ranji trophy Rohit sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரஞ்சி போட்டியில் விளையாட உள்ளார்.

Continues below advertisement

Ranji trophy Rohit sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, முதல் தர போட்டிகளில் எப்படி செயல்பட்டுள்ளார் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

கம்பேக் வருமா ரோகித் சர்மா?

இந்திய அணி அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம்-அவுட்டும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர்களில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமானதாகவே இருந்தது. இதனால், அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி தனது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ரஞ்சி போட்டியில் ரோகித் சர்மா:

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர, தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்ந்த ரோகித் சர்மா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிப் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ள, ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ரோகித் விளையாட உள்ளார். முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில், மும்பை அணிக்காக ரோகித் கடைசியாக விளையாடி இருந்தார். அதில், 140 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒட்டுமொத்த முதல் தர போட்டியில், ரோகித் சர்மாவின் செயல்பாடுகளை விளக்கும் புள்ளி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முதல்தர போட்டியில் ரோகித்தின் புள்ளி விவரங்கள்:

  • ரோஹித் சர்மா இதுவரை 128 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடுவதால், முதல்தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில்லை
  • ரோகித் சர்மா இதுவரை முதல் தர போட்டிகளில் 49.39 சராசரியுடன் 9287 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால் 10,000 ரன்களை கடக்க முடியும்
  • ரோஹித் சர்மா இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 29 சதங்கள் அடித்துள்ளார்.
  • முதல் தர கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 309 ரன்கள்
  • ரோகித் சர்மா முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை 38 அரைசதங்கள் அடித்துள்ளார்
  • ரோகித் சர்மா இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 167 சிக்சர்களை விளாசியுள்ளார்
  • ரோகித் சர்மா இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 1072 பவுண்டரிகளை அடித்துள்ளார்
  • ரோகி பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் தற்போது அவர் பந்துவீசுவதில்லை என்றாலும்,  முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தயாராகும் முனைப்பில் ரோகித்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அது முடிவுற்றதும் அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை ரோகித் வழிநடத்த உள்ளார். அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அதோடு, வரும் ஜுன் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தான், ரோகித் மீண்டும் ரஞ்சி போட்டியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

Continues below advertisement