Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஆனார் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து டி20 தொடர்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் டாஸ்சில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையும் படிங்க: ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
அர்ஷ்தீப் சிங் சாதனை:
இந்த போட்டியில் இங்கிலாந்தின் முதல் இரண்டு விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ஆனார் . அவர் யுஸ்வேந்திர சாஹலின் 96 விக்கெட்டுகளின் சாதனையை முறியடித்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் தனது 61வது டி20 போட்டியில் தொடக்க வீரர்களான பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோரை வெளியேற்றி இந்த மைல்கல்லை எட்டினார்.
அர்ஷ்தீப் 2022 இல் இங்கிலாந்துக்கு எதிராக தனது T20 போட்டியில் அறிமுகமானார், அதன் பின்னர் டி20 வடிவில் இந்தியாவின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்
1) அர்ஷ்தீப் சிங் - 61 போட்டிகளில் 97* விக்கெட்டுகள்
1) யுஸ்வேந்திர சாஹல் - 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகள்
3) புவனேஷ்வர் குமார் - 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகள்
4) ஜஸ்பிரித் பும்ரா - 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகள்
5) ஹர்திக் பாண்டியா - 109 போட்டிகளில் 89 விக்கெட்டுகள்