இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது முறையாக தந்தையாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா:


இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடரில் முதல் போட்டி அல்லது முதல் இரண்டு போட்டிகளின் போது கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பு எடுத்துக் கொள்வார் என செய்திகள் வெளியாகி உள்ளன.அவரது தனிப்பட்ட வேலை காரணமாக அவர் முதல் போட்டியில் ஆட முடியாத நிலையில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


அதாவது ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரித்திஜா சஜ்தே ஆகியோர் தங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஒருவேளை இந்த தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா விலகினார் விராட் கோலி கேப்டனாக நியமிகப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பும்ராவை பிசிசிஐ நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா