இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.


ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதே போல், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த முறைஇந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்திய வீரர்களை அணிகள் அன்-கேப்ட் வீரர்களாக தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தோனி, சந்தீப் சர்மா, பியூஷ் சாவ்லா, மோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.


இதனை பயன்படுத்திக் கொண்டு அனைத்து அணிகளும் 4 கோடிக்குள் இந்த வீரர்களை தங்கள் அணியிலேயே தக்கவைத்து கொள்ள முடியும். அதே நேரம் அடுத்த சீசனில் தோனி விளையாடுவார இல்லையா என்பது தொடர்பன கேள்விக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரம் பிசிசிஐ அறிவித்துள்ள ஐபிஎல் விதிகள் எல்லாம் தோனி விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.


புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய தோனி:


இதனிடையே தோனியும் 40 வயதை கடந்தாலும் தன்னுடைய பிட்னெஸை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். கடந்த சீசனில் ரசிகர்களுக்கான நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வை கொடுத்தது. ஏனென்றால் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அந்த ஹேர்ஸ்டைலுடன் தான் அறிமுகம் செய்யப்பட்டார். ரசிகர்களுக்காக மீண்டும் அந்த ஹேர்ஸ்டைலுடன் விளையாடினார். அதேபோல் ஹேர்ஸ்டைலுடன் தான் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தோனி காணப்பட்டார். இந்த நிலையில் தோனி தற்போது புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார்.





தனது பிரத்யேக ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிமிடம் முடியை திருத்தி கொண்டுள்ள தோனி அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.