டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பதே கடினமான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா சர்வ சாதரணமாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்களை அடித்து அதற்கு ஒரு டிரெண்ட் செட்டர் ஆனார்.
அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு இதே நாளில் (13/11/2014) இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.
தொட முடியாத சாதனை:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா அடித்திருந்தார். அதற்கு அடுத்த படியாக முன்னள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரடி இரட்டை சதம் விளாசினர் (219). இதை யாரும் நெருங்க முடியாது என்று பலரும் கணித்தனர்.
ஆனால் இதை அனைத்தையும் தவிடு பொடியாக்கினார் ரோகித் சர்மா. 2013 ஆம் பெங்களூருவில் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை அடித்தார். இதன் பிறகு அடுத்த ஆண்டே இலங்கை அணிக்கு எதிராக தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.
இதையும் படியுங்கள்:
டிரெண்ட் செட்டர் ரோகித்:
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு 3 மூன்று கிரிக்கெட் விளையாடமல் இருந்த ரோகித் சர்மாவின் இது இரண்டாவது இன்னிங்ஸ்சின் தொடக்கமாக இந்த போட்டி அமைந்தது. போட்டியின் தொடக்கத்தில் ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் தனது அரைசதத்தை 72 பந்துகளில் கடந்தார். அதன் பிறகு சதத்தை 100 பந்துகளிலும், 125 பந்துகளில் 150 ரன்களையும், 151 பந்துகளில் 200 ரனகளையும், அடுத்த 16 பந்துகளில் 250 ரன்களையும் கடந்தார். அதன் பிறகு இதே இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மூன்றாவது இரட்டை சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பல வீரர்கள் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்தாலும் ரோகித் சர்மா அடித்து கொடுத்த இந்த இரட்டை சதங்கள் தான் இன்று ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிக்க டிரெண்ட் செட்டர் என்று சொன்னால் அது மிகையாகாது.