Rohit Sharma: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி இன்னும் தொடங்கவில்லை, முதல் டெஸ்ட் நடக்க உள்ள நாக்பூர் ஆடுகளம் 'டாக்டர்' என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்தியா ஆடுகளத்தை வித்தியாசமாக தயார் செய்வதாக குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவிடம்

  புதன்கிழமை (08/02/2023) செய்தியாளர்களிடம் கேட்டபோது, ​​அவர் சரியான பதிலை அளித்தார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித், போட்டியில் கவனத்தை செலுத்துங்கள், மைதானத்தில் கவனத்தை செலுத்தாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், தலைசிறந்த 22 வீரர்கள் விளையாடுகிறார்கள் அவர்களை கவனியுங்கள் எனவும் கூறியுள்ளார். 


மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ஆடுகளத்தைப் பற்றிப் பேசுகையில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தின் மேஎற்பரப்பு உதவப் போகிறது என்று ரோஹித் கூறினார். 


போட்டியில், "ஒரு திட்டத்தை வைத்திருப்பது மற்றும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றும், "கேப்டன்கள் களத்தில் வெளிப்படையாக வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள் மற்றும் போட்டியின் தன்மையையும் பந்துவீச்சாளர்களையும் மாற்றுவார்கள். எனவே அதற்கேற்ப திட்டமிட்டு விளையாட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரைப் பற்றி பேசுகையில், 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது சவாலானதாக இருக்கும் என்று ரோஹித் ஒப்புக்கொண்டார், இருப்பினும் இந்தியா ஒரு நேர்மறையான முடிவுக்காக தங்களைத் தயார்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறினார்.  


"எங்களுக்கு BGT இல் நான்கு திடமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம். இது ஒரு சவாலான தொடராக இருக்கும், அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிதான் முக்கியம். அப்போது தான் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.