சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த ஆறாவது இந்திய பேட்டர் என்ற பெருமையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நேற்று (மார்ச் 11) பெற்றார். 

17,000 ரன்களை கடந்த ரோகித்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ரோகித் ஷர்மா. தனது 438வது சர்வதேச போட்டியில் விளையாடி வரும் 35 வயதான வலது கை பேட்ஸ்மேன், உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இந்த சாதனையை செய்ய 21 ரன்கள் தேவைப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் அவர் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், மேலும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் அமர்வில் மேலும் நான்கு ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த எலைட் கிளப்பில் இணைந்துள்ளார். அவர் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

Position

Player

Matches

Runs

Average

Best

1

Sachin Tendulkar

664

34357

48.52

248*

2

Virat Kohli

494*

25106*

53.53

254*

3

Rahul Dravid

504

24064

45.57

270

4

Sourav Ganguly

421

18433

41.42

239

5

MS Dhoni

535

17092

44.74

224

6

Rohit Sharma

438*

17014*

42.85

264

எலைட் லிஸ்ட்

இந்தியாவைப் பொறுத்தவரை, ரோஹித்துக்கு முன், புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கேப்டன் விராட் கோலி, தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் எம்எஸ் தோனி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 17000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். ரோஹித் 17,000-க்கும் மேற்பட்ட ரன் கிளப்பில் இணைந்த ஆறாவது இந்திய பேட்டர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்: படுத்தியெடுக்கும் H3N2 வைரஸ்...செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? உலக சுகாதார அமைப்பு சொல்வதை கேளுங்கள்..!

தோனியை முந்தும் வாய்ப்பு

இதுமட்டுமின்றி அவர் ஐந்தாவது முன்னணி ரன் எடுப்பவராக ஆவதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அவர் தற்போது இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்காக அதிக அளவில் விளையாடிய நாட்களில், கேப்டனாக இருந்த மூன்று ஐசிசி ஒயிட்-பால் கோப்பைகளையும் வென்ற வரலாற்றில் ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்ற தோனி, மொத்தம் 535 போட்டிகளில் விளையாடி 17092 ரன்கள் எடுத்தார்.

ஒருநாள் போட்டி வரை காத்திருக்க வேண்டுமா?

ரோஹித் அவரை விட 78 ரன்கள் குறைவாக இருக்கிறார். இந்த இன்னிங்சில் 35 ரன்னுக்கு ஆட்டமிழந்துவிட்ட  நிலையில், அடுத்த இன்னிங்சில் 78 ரன் வரை எடுக்க நேரம் கிடைப்பது கடினம்தான். ஒருவேளை நீண்ட நேரம் கிரீஸில் இருக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் தோனியின் எண்ணிக்கையைத் தாண்டலாம். ஜூன் 2007 இல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக அறிமுகமான ரோஹித், மொத்தம் 48* டெஸ்ட், 241 ODI மற்றும் 148 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில் அவர் முறையே 3348*, 9782 மற்றும் 3853 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டெஸ்டில் தோனியின் ரன்களைக் கடக்கத் தவறினால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் தனது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுவார். மூன்று 50 ஓவர் போட்டிகள் மார்ச் 17, 19, 22 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் நடைபெறும். முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.