நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.


ந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது.


இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிகள் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.


அணிக்கு தேவையானதை புரிந்துகொள்வார்:


இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று (அக்டோபர் 15) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில்,"பும்ரா அதிகமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து அதிகமாக விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் போக்கை சரியாக புரிந்துகொள்வார். சிறந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர். அவருடன் பேசும்போது, ஆட்டத்தினை சரியாக புரிந்துகொண்டிருப்பது தெரியும். பும்ரா கேப்டனாக அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை.






அதனால், என்னால் அது குறித்து பேச முடியாது. 1 டெஸ்ட் போட்டி, சில டி20களில் மட்டுமே பும்ரா கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். அணிக்கு தேவையானதை புரிந்துகொள்வார். கடினமான சூழ்நிலையில் தலைவன் ஒருவன் தன்னை முன்னிருத்த வேண்டுமானால் நிச்சயமாக பும்ரா அந்த நபர்களில் ஒருவராக இருப்பார்.


அதனால், முந்தைய காலங்களில் பும்ரா எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார்.புதியதாக அணியில் ஒரு பந்துவீச்சாளர் வந்தால் அவரிடம் பேசுவதாகட்டும் அல்லது அணியாக அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதாகட்டும் பும்ரா எப்போதும் எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார். அதனால் அவர் இந்த மாதிரி விஷயங்களில் முடிவெடுக்க சிறந்த நபராக இருப்பார்"என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.